ராகுல் டிராவிட்டிடம் ஸ்ரீசாந்த் சொன்ன பொய் தான்.. ராஜஸ்தான் கேப்டனாக காரணம்.. சஞ்சு சாம்சன் பேட்டி

Sanju Samson 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணி 10 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது. அதனால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள ராஜஸ்தான் அணி 2008க்குப்பின் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக வரலாற்றில் முதலும் கடைசிமாக 2008ஆம் ஆண்டு ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் கோப்பையை வென்றது.

அதன் பின் ராகுல் டிராவிட், ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் போன்ற சிறப்பான கேப்டன்கள் தலைமையில் விளையாடிய அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே திண்டாடி வந்தது. அந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணியில் 2012 முதல் விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 2021 சீசனில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருடைய தலைமையில் 2022 சீசனில் அபாரமாக விளையாடிய ராஜஸ்தான் 15 வருடங்கள் கழித்து ஃபைனலுக்கு தகுதி பெற்ற சாதனை படைத்தது.

- Advertisement -

ஸ்ரீசாந்த் சொன்ன பொய்:
அதே போல கேப்டனாக பொறுப்பேற்றது முதல் கடந்த 4 வருடங்களாக தொடர்ந்து 350க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து வரும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தானின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் 2012இல் ராஜஸ்தான் கேப்டனாக இருந்த ஜாம்பவான் ராகுல் டிராவிட்டிடம் “இவர் யுவராஜ் போல உள்ளூரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்துள்ளார்” என்று ஸ்ரீசாந்த் பொய் சொன்னதாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

அதுவே நாளடைவில் தமக்கு ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் வாய்ப்பைக் கொடுத்து இன்று கேப்டனாக முன்னேறும் அளவுக்கு உதவியதாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கொல்கத்தா அணியில் இருந்த போது எனக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தார். அப்போது ஹோட்டலில் அவரைப் பார்த்த ஸ்ரீசாந்த் என்னைப் பற்றி உறுதியாக பேசினார்”

- Advertisement -

“குறிப்பாக “கேரளாவிலிருந்து வந்துள்ள இந்தக் குழந்தை உள்ளூர் தொடரில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தது. எனவே இவரை நாம் பயிற்சியில் சோதித்துப் பார்க்கலாம்” என்று அவர் டிராவிட்டிடம் சொன்னார்” எனக் கூறினார். அந்த வகையில் ராஜஸ்தான் அணியில் விளையாடி முன்னேறிய சஞ்சு சாம்சன் கடந்த வருடம் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மண்ணில் சதமடித்து அசத்தினர்.

இதையும் படிங்க: நடராஜனையா கழற்றி விட்டீங்க.. இது மட்டும் நடந்தா டி20 உ.கோ சான்ஸ் தானா கிடைக்கும்.. எஸ்ஆர்ஹச் கோச் பேட்டி

அதே வேகத்தில் தற்போதைய ஐபிஎல் தொடரிலும் அசத்தி வரும் அவருக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மொத்தத்தில் கடந்த 2015இல் இந்தியாவுக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் மிகவும் கடுமையாக போராடி உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது பல ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement