தோனிக்கு எதிராக கடைசி ஓவரை சிறப்பாக வீசிய யாஷ் தயாளை பாராட்டி – ரிங்கு சிங் வெளியிட்ட பதிவு

Rinku
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68-வது மிக முக்கியமான லீக் போட்டியில் விளையாடிய பெங்களூரு அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்து நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. பெங்களூரு அணியின் இந்த வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 218 ரன்களை குவிக்க பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரமாண்ட இலக்கு சிஎஸ்கே அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதே வேளையில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பும் இருந்தது.

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய போட்டியின் கடைசி ஓவரின் போது 17 ரன்கள் அடித்தால் சென்னை அணி தோல்வியை சந்திக்கும்போதும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த ஓவரை சிறப்பாக வீசிய யாஷ் தயாள் முதல் பந்தில் தோனிக்கு எதிராக சிக்சரை வழங்கியும் மீதமுள்ள ஐந்து பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஆர்சிபி அணியை மறக்க முடியாத வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு சேர்த்து பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற வைத்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி ஒவரை வீசிய அவர் ஐந்து சிக்ஸர்களை விட்டுக் கொடுத்து தோல்விக்கு காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த ஆண்டு மிகச்சிறந்த பினிஷரான தோனிக்கு எதிராகவே அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவரை வீழ்த்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு அவரது ஓவரில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் தற்போது அவரை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அதான் டர்னிங் பாய்ண்ட்.. தோனி சிக்ஸ் அடிச்சதும் ரிங்கு நியாபகம் வந்தாரு.. யாஷ் தயாள் பேட்டி

அதில் “இது கடவுளின் திட்டம் பேபி” என்று அவரது புகைப்படத்தை பதிவு செய்து அவரது சிறப்பான பந்துவீச்சை பாராட்டியுள்ளார். கடந்த ஆண்டு குஜராத் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட யாஷ் தயாளை நம்பி ஏலத்தில் எடுத்த ஆர்.சி.பி அணி இந்த ஆண்டு அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement