நடராஜனையா கழற்றி விட்டீங்க.. இது மட்டும் நடந்தா டி20 உ.கோ சான்ஸ் ரொம்ப தூரமில்லை.. எஸ்ஆர்ஹச் கோச் பேட்டி

James Franklin
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு துறையில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோரை விட ஐபிஎல் 2024 தொடரில் நடராஜன் குறைந்த எக்கனாமியில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மேலும் கிட்டத்தட்ட பும்ரா போல துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசுவதில் வல்லவரான நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். ஆனால் அப்படிப்பட்ட அவரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இணைக்காத தேர்வுக் குழு கலீல் அகமது, ஆவேஷ் கானை தேர்ந்தெடுத்தது. அதனால் ஏதேனும் ஒரு வீர காயமடைந்தால் கூட நடராஜனுக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

வாய்ப்பு கிடைக்கும்:
இந்நிலையில் சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜனுக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் நிறைய ஆதரவு இருப்பதாக ஹைதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்ளின் தெரிவித்துள்ளார். எனவே எஞ்சிய ஐபிஎல் தொடரிலும் இதே போல அசத்தும் பட்சத்தில் உலகக் கோப்பையில் இந்திய அணியில் நடராஜன் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி மும்பை போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் நிறைய தரமான வீரர்கள் உள்ளனர். எனவே நடராஜன் தம்மால் முடிந்ததை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். யார்க்கர் பந்துகள் அவருடைய பலமாக இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அவர் எங்களுடைய அணியின் சொத்தாகவும் திகழ்கிறார். இந்தியாவில் அவரைப் பற்றி நிறைய பேச்சுக்கள் காணப்படுகின்றன”

- Advertisement -

“எனவே ஒருவேளை நடராஜன் இதே போல தொடர்ந்து ஐபிஎல் தொடரில் தம்முடைய ஃபார்மை தக்க வைத்துக் கொண்டால் அந்தப் பேச்சுக்களே அவருக்கான வாய்ப்பை கவனித்துக் கொள்ளும். அதனால் தொடர்ந்து இதே போல விளையாடும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணியில் நடராஜன் சேர்வதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: துண்டு ஓரிரு தடவை தான் தவறும்.. மீண்டும் அவர் நெருப்பா வருவாரு.. சிஎஸ்கே கோச் எரிக் பேட்டி

முன்னதாக 2020/21 சீசனில் ஆஸ்திரேலிய மண்ணில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் நடராஜன் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்கேற்றினார். குறிப்பாக காபா மைதானத்தில் முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா வெல்வதற்கு நடராஜன் உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement