துண்டு ஓரிரு தடவை தான் தவறும்.. மீண்டும் அவர் நெருப்பா வருவாரு.. சிஎஸ்கே கோச் எரிக் பேட்டி

Eric Simons
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 52வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது வெற்றியை பதிவு செய்தது. மே ஐந்தாம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 168 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43, கேப்டன் ருதுராஜ் 32 ரன்கள் எடுத்தனர்.

ஆனால் அந்த இலக்கை சேசிங் செய்த பஞ்சாப் ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி 20 ஓவரில் 139/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதனால் பஞ்சாப்பை 3 வருடங்கள் கழித்து தோற்கடித்த சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

நெருப்பா வருவாரு:
முன்னதாக அப்போட்டியில் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். கடந்த வருடம் அபாரமாக விளையாடி சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்து ஆப்கானிஸ்தான் தொடரில் அசத்தினார். அதே வேகத்தில் இந்த வருடமும் சென்னை அணிக்காக அசத்தி வரும் அவர் முதல் 9 போட்டிகளில் 360 ரன்களை எடுத்தார்.

குறிப்பாக மிடில் ஓவர்களில் அதிரடியான சிக்ஸர்களை பறக்க விட்டு எதிரணிகளை பந்தாடிய அவர் 2024 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகி சாதித்தார். ஆனால் இந்தியாவுக்காக தேர்வான பின் விளையாடிய 2 ஐபிஎல் போட்டிகளிலும் அவர் அடுத்தடுத்த கோல்டன் டக் அவுட்டானது இந்திய ரசிகர்களை கலக்கமடைய வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஓரிருமுறை துண்டு தவறுவது இயல்பு என்று தெரிவிக்கும் சிஎஸ்கே அணியின் பவுலிங் ஆலோசகர் எரிக் சிமன்ஸ் விரைவில் சிவம் துபே அடித்து நொறுக்குவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஓரிரு முறை நீங்கள் தடுமாறுவதால் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன். அது எங்கள் பலமாக இருந்தது. சிவம் துபே போன்ற ஒருவர் அந்த வேலையில் அபாரமாக செயல்பட்டு வருகிறார்”

இதையும் படிங்க: கமான் நண்பா.. ஈஸியான மேட்ச்ல அப்படி செஞ்சுட்டு இப்படி செய்யலாமா.. தோனிக்கு இர்பான் பதான் அட்வைஸ்

“தற்போது அவர் ஓரிருமுறை சீக்கிரமாக அவுட்டானார். அவ்வாறு நடப்பது இயல்பாகும். இருப்பினும் அந்த நேரத்தில் எங்களுடைய மற்ற வீரர்கள் கடுமையாக போராடி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தனர். எனவே மிடில் ஆர்டரை பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம் என்று நான் நினைக்கவில்லை. அங்கே தேவையான தரம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். அது இந்த ஆட்டத்தில் நடக்கவில்லை. ஆனால் நாங்கள் முன்னோக்கி செல்லும் போது மீண்டும் எங்கள் வீரர்கள் நெருப்பாக செயல்படுவார்கள்” என்று கூறினார்.

Advertisement