கமான் நண்பா.. ஈஸியான மேட்ச்ல அப்படி செஞ்சுட்டு இப்படி செய்யலாமா.. தோனிக்கு இர்பான் பதான் அட்வைஸ்

Irfan Pathan 7
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 54வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அதனால் 6வது வெற்றியை பதிவு செய்த சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மே ஐந்தாம் தேதி தரமசாலாவில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபசமாக ரவீந்திர ஜடேஜா 43, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்தனர். அதன் பின் சேசிங் செய்த பஞ்சாப் சுமாராக விளையாடி 139/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக இந்தப் போட்டியில் கேரியரிலேயே முதல் முறையாக எம்எஸ் தோனி 9வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.

- Advertisement -

கமான் நண்பா:
42 வயதில் முழங்கால் வலியால் அவதிப்படும் அவர் கடைசி நேரத்தில் மட்டும் களமிறங்கி குறைந்த பந்துகளை எதிர்கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் ஆரம்பகட்ட போட்டிகளில் அடித்து நொறுக்கி அற்புதமான ஃபினிஷிங் செய்த அவர் இப்போட்டியில் ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இந்நிலையில் அதிக விக்கெட்டுகள் விழாத மும்பை போன்ற போட்டிகளில் மேலே களமிறங்கிய தோனி வென்றாக வேண்டிய பஞ்சாப்புக்கு எதிரான முக்கிய போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கியதாக இர்பான் பதான் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி 9வது இடத்தில் பேட்டிங் செய்தது சிஎஸ்கே அணிக்கு வேலை செய்யவில்லை. அது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு உதவவில்லை”

- Advertisement -

“அவர் 42 வயதை தொட்டவர் என்பதை நான் அறிவேன். ஆனால் அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர் பொறுப்புடன் பேட்டிங்கில் முன்கூட்டியே களமிறங்க வேண்டும். அவர் குறைந்தது 4 முதல் 5 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். கடைசி ஓரிரு ஓவர்களில் மட்டும் பேட்டிங் செய்வது சிஎஸ்கே அணியின் நீண்டகால பயனுக்கு உதவாது. இங்கிருந்து சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம்”

இதையும் படிங்க: தோனியை போல்டாக்கி சாதனை படைத்த ஹர்ஷல் படேல்.. கடைசியில் சொன்ன ஒரு வார்த்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

“இருப்பினும் பொறுப்பான சீனியர் வீரராக நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வேண்டும். ஆம் அவர் மும்பைக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் இங்கே அணிக்கு தேவையான முக்கிய நேரத்தில் நீங்கள் சர்துள் தாக்கூரை முன்னதாக அனுப்பினீர்கள். எனவே தோனி 9வது இடத்தில் பேட்டிங் செய்வதை பார்க்க முடியாது. இதில் சிஎஸ்கே கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். யாராவது ஒருவர் “கமான் நண்பா. 4 ஓவர்களாவது பேட்டிங் செய்” என்று தோனியிடம் சொல்ல வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement