தோனியை போல்டாக்கி சாதனை படைத்த ஹர்ஷல் படேல்.. கடைசியில் சொன்ன ஒரு வார்த்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே ஐந்தாம் தேதி நடைபெற்ற 53வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அதனால் 6வது வெற்றியை பதிவு செய்த நடப்பு சாம்பியன் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. தரம்சாலாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹர், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் அதைத்தொடர்ந்து சேசிங் செய்த பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி 20 ஓவரில் 139/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30, சசாங் சிங் 27 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சாதனையும் மரியாதையும்:
சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 3 வருடங்கள் கழித்து பஞ்சாப்பை தோற்கடித்த சென்னை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. முன்னதாக இந்தப் போட்டியில் சென்னை அணியின் ஜாம்பவான் வீரர் எம்.எஸ். தோனி வழக்கத்திற்கு மாறாக தன்னுடைய கேரியரிலேயே முதல் முறையாக 9தாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.

இந்த வருடம் பெரும்பாலான போட்டிகளில் ஓரிரு பந்துகளை எதிர்கொண்டாலும் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கி அற்புதமான ஃபினிஷிங் செய்த அவர் இந்த போட்டியிலும் சிக்சர்களை பறக்க விடுவார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஹர்ஷல் பட்டேல் வீசிய 18.5வது பந்தை எதிர்கொண்ட அவர் கிளீன் போல்டாகி கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

மறுபுறம் அந்த விக்கெட்டை பெரிய அளவில் கொண்டாடாத ஹர்ஷல் படேல் ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனியை கிளீன் போல்ட்டாக்கிய 2வது பவுலர் என்ற தனித்துவமான சாதனையை படைத்தார். இதற்கு முன் கடந்த 2021 சீசனில் ஆவேஷ் கான் தான் முதல் பவுலராக தோனியை போல்ட்டாக்கினார். அந்த நிலையில் போட்டி முடிந்ததும் ஏன் மகத்தான தோனியின் விக்கெட்டை எடுத்ததை கொண்டாடவில்லை? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் நாங்கள் மோசமான தோல்வியை சந்திக்க இதுவே காரணம் – ஒப்புக்கொண்ட கே.எல் ராகுல்

அதற்கு 2011 உலகக்கோப்பை இந்தியாவுக்கு வென்ற முன்னாள் கேப்டன தோனி மீது அதிக மதிப்பு வைத்திருப்பதால் விக்கெட்டை வெறித்தனமாக கொண்டாடவில்லை என்று ஹர்ஷல் படேல் கூறியது பின்வருமாறு. “தோனி மீது நான் அதிகப்படியான மரியாதை வைத்திருக்கிறேன். எனவே அவரை அவுட்டாக்கியதும் அதை நான் அதிகமாக கொண்டாடவில்லை” என்று கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

Advertisement