ரோஹித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வர இவருக்கே அதிக வாய்ப்பு – சுரேஷ் ரெய்னா கணிப்பு

Raina-and-Rohit
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே ஐசிசி கிரிக்கெட் கோப்பைகளை தவறவிட்டு வரும் இந்திய அணியானது 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பையை சொந்த மண்ணில் தவறவிட்டது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது. அதோடு எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு ஆகியோர் இந்திய அணியை தீவிரமாக வலுப்படுத்தும் நோக்கில் தங்களது வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்தே டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணி கட்டமைக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா டி20 உலக கோப்பையை ஒருவேளை தவறவிடும் பட்சத்தில் நிச்சயம் அவருக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் அடுத்த கேப்டன் வாய்ப்பிற்கான போட்டியில் பும்ரா, ஹார்டிக் பாண்டியா, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் என ஏகப்பட்ட வீரர்கள் வரிசையில் நிற்கும் வேளையில் இளம் வீரர்கள் பலரும் கேப்டன்சி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பது குறித்த கேள்வி அதிகளவில் எழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா போன்றவர்கள் தங்களது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் வேளையில் அடுத்ததாக இந்திய அணியை வழிநடத்தப்போகும் கேப்டன் என்கிற வகையில் இந்திய அணி யாரை தேர்ந்தெடுக்கும்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டு வரும் வேளையில் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோரை தாண்டி இளம் வீரர் ஒருவரையே அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : 222 ரன்ஸ்.. அசத்திய கொல்கத்தா.. 14 வருட பரிதாபத்தை மாற்றுமா பெங்களூரு.. 7வது தோல்வி லோடிங் ஆகிறதா?

ஏனெனில் சுப்மன் கில் கேப்டனாக நன்றாக செயல்படுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடி காட்டி வருகிறார். தற்போது 23 வயதான அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் அடுத்ததாக நீண்ட ஒரு கேப்டன் பயணத்திற்கான தேர்வாக அவர் சரியாக இருப்பார் என்பதால் அவரே அடுத்த இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement