222 ரன்ஸ்.. அசத்திய கொல்கத்தா.. 14 வருட பரிதாபத்தை மாற்றுமா பெங்களூரு.. 7வது தோல்வி லோடிங் ஆகிறதா?

KKR vs RCB
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 36வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு சுனில் நரேன் தடுமாற்றமாக விளையாடினார்.

ஆனால் எதிர்புறம் அசத்திய பில் சால்ட் 4வது ஓவரில் லாக்கி பெர்குசனுக்கு எதிராக 6, 4, 4, 6, 4, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு 28 ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அந்த வகையில் 56 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அவர் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 48 (14) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் தடுமாறிய சுனில் நரேனை 10 (15) ரன்களில் அவுட்டாக்கிய யாஷ் தயாள் அடுத்ததாக வந்த அங்ரீஸ் ரகுவன்சியை 3 ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

பெங்களூரு வெல்லுமா:
அதற்கடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாட முயற்சித்து 16 (8) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்கள். இருப்பினும் அதில் நல்ல துவக்கத்தை பெற்ற போது ரிங்கு சிங் 24 (16) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர். அவருடன் சேர்ந்து மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதமடித்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் 50 (36) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் வந்த ரமந்தீப் சிங் அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 24* (9) ரன்கள் குவித்த நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அவருடன் ரசல் 27* (20) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் கொல்கத்தா 222/6 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் மற்றும் யாஸ் தயாள் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதனால் புள்ளிப்பட்டியலில் ஏற்கனவே கடைசி இடத்தில் தவிக்கும் பெங்களூரு வெற்றி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இதையும் படிங்க: 2016இல் சிஎஸ்கே அணி ஃபிக்சிங் செய்ததால் தடை பெற்றதா? நடந்தது என்ன? பின்னணியை பகிர்ந்த ரெய்னா

ஏனெனில் இதற்கு முன் வரலாற்றில் பெங்களூரு அணி 1 முறை மட்டுமே 200க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது. இதற்கு முன் 200+ ரன்களை சேசிங் செய்த 17 போட்டிகளில் 16 முறை தோல்வியை சந்தித்துள்ள அந்த அணி ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. வரலாற்றில் முதலும் கடைசிமாக அந்த அணி கடந்த 2010ம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக 204 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததே முந்தைய அதிகபட்ச இலக்காகும்.

Advertisement