2016இல் சிஎஸ்கே அணி ஃபிக்சிங் செய்ததால் தடை பெற்றதா? நடந்தது என்ன? பின்னணியை பகிர்ந்த ரெய்னா

Suresh Raina
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை தக்க வைக்கும் பயணத்தில் போராடி வருகிறது. முன்னதாக இந்திய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் 14 சீசன்களில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 10 முறை ஃபைனலில் விளையாடி 5 கோப்பைகளை வென்ற சென்னை வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ளது.

அதே போல 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ள சென்னை உலக அளவில் சிறந்த பிரீமியர் டி20 அணிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கி 2 வருடங்கள் விளையாட தடை பெற்றது மட்டுமே சென்னையின் கேரியரில் மிகப்பெரிய கருப்புப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அப்பாவி வீரர்கள்:
இருப்பினும் அப்போது சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் உரிமையாளர்கள் தான் பெட்டிங்கில் ஈடுபட்டவர்களே தவிர அணியும், வீரர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டது. அதனால் எந்த தவறும் செய்யாத சிஎஸ்கே வீரர்கள் 2016, 2017 சீசனில் புதிதாக உருவாக்கப்பட்ட புனே மற்றும் குஜராத் அணிகளுக்காக விளையாடினார்கள். குறிப்பாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி புனே அணிக்காகவும் சுரேஷ் ரெய்னா குஜராத் அணிக்காகவும் கேப்டனாக செயல்பட்டனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி 2 வருடங்கள் தடைப் பெற்றது பற்றி சுரேஷ் ரெய்னா சமீபத்திய பெட்டியில் பேசியது பின்வருமாறு. “வீரர்களாக எங்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது. 2016இல் நான் குஜராத் அணிக்கு சென்றேன். தோனி புனே அனிக்காக சென்றார். அந்த விவகாரத்தில் நடந்தது எதுவாக இருந்தாலும் அது அணிகளின் உரிமையாளர்களுக்கு இடையே நடந்திருக்க வேண்டும்”

- Advertisement -

“ஆனால் வீரர்களான எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு போட்டி நடைபெறும் போதும் எங்களுடைய மொபைல் ஃபோன்கள் வெளியே வைக்கப்படும். எனவே வீரர்களான எங்களால் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவில் ஊழல் தடுப்பு என்பது மிகவும் வலுவானது. நீங்கள் அதை நினைத்து கூட பார்க்க முடியாது. ஏனெனில் நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டும். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட ராஜஸ்தான் வீரர்கள் மீதும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை”

இதையும் படிங்க: இதான் சிஎஸ்கே – மும்பையின் வெற்றி ரகசியம்.. அதை செஞ்ச அணிகள் இன்னும் ஜெயிக்கல.. ரெய்னா பேட்டி

“ஆனால் ஒவ்வொரு வீரர்களுக்கும் தனி வழி இருக்கும். என்னுடைய உத்வேகம் எல்லாம் எப்போதும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த செய்தியை அறிந்து நாங்கள் உறைந்து போனோம். அந்த வருடம் (2013) மும்பைக்கு எதிராக ஃபைனலில் விளையாடிய நாங்கள் 2 வருடம் தடை பெற்றோம். இருப்பினும் அதிலிருந்து மீண்டும் வந்து கோப்பை வென்றோம். அப்போது சிலர் எங்களை டாடி ஆர்மி என்று சொன்னார்கள். இருப்பினும் அந்த டாடி வீரர்கள் தான் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து தங்களுடைய மகள்களுடன் கோப்பையை வென்றோம்” என்று கூறினார்.

Advertisement