இதான் சிஎஸ்கே – மும்பையின் வெற்றி ரகசியம்.. அதை செஞ்ச அணிகள் இன்னும் ஜெயிக்கல.. ரெய்னா பேட்டி

Suresh Raina 2
- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாக சாதனை படைத்துள்ளன. ஆனால் இதே தொடரில் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் கடந்த 16 வருடங்களாக கடுமையாக போராடியும் இதுவரை ஒரு கோப்பையை கூட முத்தமிட முடியாமல் திணறி வருகின்றன.

குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி போன்ற பல நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாததால் கிண்டல்களை சந்தித்து வருகிறது. மறுபுறம் ரோகித் சர்மா மற்றும் எம்எஸ் தோனி தலைமையில் அசால்டாக தலா 5 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ளன.

- Advertisement -

வெற்றிக்கான ரகசியம்:
மும்பை மற்றும் சென்னை அணிகளின் இந்த வெற்றிக்கு தரமான வீரர்களை ஏலத்திலேயே குறைந்த தொகைக்கு வாங்குவது, ஒரு சில தோல்விகளை சந்தித்தாலும் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாதது போன்ற அம்சங்கள் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அணிகள் இப்போது வரை கோப்பையை வென்றதில்லை என சிஎஸ்கே அணியின் சின்னத் தல சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை எப்போதும் பார்ட்டியில் ஈடுபட்டதில்லை. அதனாலேயே அவர்கள் வெற்றிகரமாக இருக்கின்றனர். ஆனால் பார்ட்டியில் ஈடுபட்ட 2 – 3 ஐபிஎல் அணிகள் இதுவரை கோப்பையை வென்றதில்லை. (அப்போது ஆர்சிபி அணியை சொல்கிறீர்களா என்று தொகுப்பாளர் கேட்டார்). இல்லை இதுவரை கோப்பையை வெல்லாத சில அணிகள் கண்டிப்பாக அதிக பார்ட்டியில் ஈடுபட்டிருக்க வேண்டும்”

- Advertisement -

“சிஎஸ்கே அணியில் நாங்கள் எப்போதும் அதை செய்ததில்லை. அதனாலேயே நாங்கள் 5 ஐபிஎல் கோப்பை மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றோம். மும்பையும் 5 கோப்பையும் வென்றுள்ளது. இரவு நேரத்தில் நீங்கள் தாமதமாக பார்ட்டியில் ஈடுபட்டால் மே – ஜூன் மாத வெயிலில் அப்படி அடுத்த நாள் காலையில் எழுந்து சிறப்பாக விளையாட முடியும்? இரவு நேரத்தில் பார்ட்டியில் ஈடுபட்டால் எப்படி மதிய நேர போட்டியில் விளையாட முடியும்”

இதையும் படிங்க: 5 கோப்பை ஜெய்ச்சும்.. அந்த 2 வேலையில் ரோஹித் சொதப்பிட்டாரு.. அதான் மும்பை கழற்றி விட்டாங்க.. உத்தப்பா கருத்து

“எனவே சிஎஸ்கே அணி எப்போதும் இரவு நேரத்தில் பார்ட்டி செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டோம். நாங்கள் இந்தியாவுக்காகவும் விளையாடுகிறோம் என்பதை மனதில் எப்போதும் வைத்திருந்தோம். ஒருவேளை பார்ட்டியில் ஈடுபட்டு நான் சிறப்பாக விளையாடாமல் போனால் பின்னர் எப்படி என்னுடைய கேப்டன் என்னை தேர்ந்தெடுப்பார்? இருப்பினும் தற்போது ஓய்வு பெற்று விட்டேன். இப்போது எங்களால் பார்ட்டியில் கொண்டாட முடியும்” என்று கூறினார்.

Advertisement