5 கோப்பை ஜெய்ச்சும்.. அந்த 2 வேலையில் ரோஹித் சொதப்பிட்டாரு.. அதான் மும்பை கழற்றி விட்டாங்க.. உத்தப்பா கருத்து

Robin Uthappa
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் இம்முறை ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. அதற்கு ஆரம்பம் முதல் தற்போது வரை மும்பை ரசிகர்களே உச்சகட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் சச்சின் தலைமையில் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறிய மும்பை 2013 – 2020 வரையிலான காலகட்டங்களில் ரோகித் சர்மா தலைமையில் 5 கோப்பைகளை வென்றது.

அதனால் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மா இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை தலைமை தாங்கி வருகிறார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், ஒரே உலகக் கோப்பையில் 5 சதங்கள் போன்ற பல்வேறு உலக சாதனைகளையும் படைத்துள்ள அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார்.

- Advertisement -

4 வருடமாக சொதப்பல்:
ஆனால் அப்படிப்பட்ட அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இந்நிலையில் கடந்த 4 வருடங்களாக கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா அசத்தவில்லை என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார். ரசிகர்களுக்கு இது கசப்பாக இருந்தாலும் அதனாலயே மும்பை நிர்வாகம் ரோஹித் சர்மாவை கழற்றி விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“ஹர்திக் பாண்டியா மும்பை அணியால் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட வீரர். எனவே அவரை அவர்கள் மும்பை இந்தியன்ஸ் வீரராக பார்க்கிறார்கள். 2013இல் ரோகித் சர்மாவிடம் மும்பை கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்ட போது அது ரிக்கி பாண்டிங்கிடம் எடுக்கப்பட்டது. இதுவும் அதே போன்ற உரிமையாகும். அந்த காலத்தில் சச்சின், பாண்டிங், ஹர்பஜன் போன்ற சீனியர்கள் ரோகித்துக்கு ஆதரவு கொடுத்தனர்”

- Advertisement -

“இங்கே ரோஹித் சர்மா போன்ற பேட்ஸ்மேனின் மகத்துவத்தை பற்றி நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் கோடிகளை முதலீடு செய்யும் ஒரு ஐபிஎல் அணியின் பார்வையில் பார்க்கும் போது கடந்த 4 வருடங்களாக அவருடைய புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லை. 2020இல் அவருடைய தலைமையில் மும்பை வென்றது. ஆனால் அதன் பின் கடந்த 4 வருடங்களில் மும்பை வெல்லவில்லை. கடந்த 3 சீசன்களில் ரோஹித் சர்மா 300க்கும் குறைவான ரன்களே அடித்துள்ளார்”

இதையும் படிங்க: இங்க உணர்ச்சிகளுக்கு மதிப்பே இல்ல.. பும்ரா கடவுள் போன்ற பிளேயர்.. ரசிகருக்கு டேல் ஸ்டைன் பதில்

“எனவே ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அவர் வெற்றிகரமாக செயல்படவில்லை. அதே சமயம் ஐபிஎல் தவிர்த்து அவர் மற்ற இடங்களில் ரன்கள் அடித்துள்ளார். அதனாலயே ரோஹித்தை தாண்டி அணியை பார்க்க வேண்டும் என்ற இடத்திற்கு மும்பை வந்துள்ளார்கள். இதைப் பற்றி கடந்த வருடமே அவரிடம் மும்பை பேசியிருக்கலாம். எனவே வெற்றிகரமான மும்பை அணி இப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக நீங்கள் குறை சொல்ல முடியாது” என்று கூறினார்.

Advertisement