இங்க உணர்ச்சிகளுக்கு மதிப்பே இல்ல.. பும்ரா கடவுள் போன்ற பிளேயர்.. ரசிகருக்கு டேல் ஸ்டைன் பதில்

Dale Styen 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் மும்பையை அடித்து நொறுக்கி 277 ரன்கள் குவித்து. அதனால் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் அடித்த அணியாக சாதனை படைத்த ஹைதெராபாத் அதோடு நிற்காமல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் வெளுத்து வாங்கி 287 ரன்கள் குவித்தது.

அதனால் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்த ஹைதராபாத் ஒரு டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணியாகவும் உலக சாதனை படைத்தது. அப்போதும் திருப்தியடையாத அந்த அணி ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் டெல்லிக்கு எதிராக மீண்டும் 266 ரன்கள் விளாசியது. அதனால் டி20 தொடரில் 3 முறை 250 ரன்கள் அடித்த அணியாக ஹைதராபாத் உலக சாதனை படைத்தது.

- Advertisement -

ஸ்டைன் பாராட்டு:
அத்துடன் பவர் பிளேவில் அதிக ரன்கள் (125/0) குவித்த அணியாகவும் ஹைதராபாத் உலக சாதனை படைத்தது. இது போக டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற மற்ற அணிகளும் கூட தங்களால் முடிந்தளவுக்கு பெரிய ரன்களை குவித்து வருகின்றன. அதனால் இந்த வருட ஐபிஎல் தொடரில் வழக்கத்தை விட பவுலர்கள் சரமாரியாக அடி வாங்கி வருகின்றனர் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இப்படி அடித்து நொறுக்கும் தற்போதைய ஐபிஎல் தொடரில் விளையாடாமல் ஓய்வு பெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டைன் நிம்மதி தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி காட்டுத்தனமான அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு மத்தியிலும் தங்களுடைய திறமையை பயன்படுத்தி துல்லியமாக செயல்படும் பவுலர்கள் கடவுளை போன்றவர்கள் என்று டேல் ஸ்டைன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நான் ஓய்வு பெற்று விட்டதால் இனிமேலும் பந்து வீசமாட்டேன் என்று நகைச்சுவை செய்வேன். ஆனால் ஒரு பவுலராக இருப்பதற்கு இது எப்போதுமே நல்ல நேரம். நீங்கள் உங்களை சிறந்தவராக மாற்றிக் கொள்ள முடிந்தால் மனிதர்களுக்கு மத்தியில் தேடப்படும் கடவுளாக இருப்பீர்கள். ரன்களுக்காக இங்கே வெறித்தனமாக விளையாடுகின்றனர்”

இதையும் படிங்க: அதுக்குள்ள உடைச்சுட்டியா.. சத்தியமா இனிமேல் தரமாட்டேன்.. ரிங்கு சிங் மீது விராட் கோலி அதிருப்தி

“பவுலர்கள் பற்றிய உணர்ச்சிகள் அதிகமாக இருந்ததில்லை. இருப்பினும் நான் ஒரு பவுலராக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார். அதைப் பார்த்த ஒரு இந்திய ரசிகர் “சுருக்கமாக ஜஸ்பிரித் பும்ரா போல இருக்க வேண்டுமென சொல்லுங்கள்” என்று அவருக்கு பதிலளித்தார். அதற்கு “ஆம். சரியாக சொன்னீர்கள்” என்று அந்த ரசிகருக்கு ஸ்டைன் பதிலளித்துள்ளார். ஏனெனில் இதே தொடரில் பல பவுலர்கள் அடி வாங்கும் நிலையில் பும்ரா மட்டும் 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை 5.96 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்து ஊதா தொப்பியை வென்று தனித்துவமாக செயல்பட்டு வருகிறார்.

Advertisement