அதுக்குள்ள உடைச்சுட்டியா.. சத்தியமா இனிமேல் தரமாட்டேன்.. ரிங்கு சிங் மீது விராட் கோலி அதிருப்தி

Virat kohli and RInku
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். அதில் ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் பெங்களூரு இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஆனால் ஏற்கனவே இந்த சீசனில் தங்களுடைய சொந்த மண்ணில் கொல்கத்தா அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்தது.

எனவே இம்முறை கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் பெங்களூரு தோற்கடித்து வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஆர்சிபி ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியின் முடிவில் இளம் இந்திய வீரர் ரிங்கு சிங்கிற்கு ஜாம்பவான் விராட் கோலி தம்முடைய பேட்டை பரிசாக கொடுத்தார்.

- Advertisement -

உடைத்த ரிங்கு:
இந்நிலையில் இன்றைய போட்டிக்கு முன்பாக அந்த பேட் உடைந்து விட்டதாக விராட் கோலியை நேரில் சந்தித்த போது ரிங்கு சிங் தெரிவித்தார். அதனால் ஆச்சரியமடைந்த விராட் கோலி அதற்குள் தம்முடைய பேட்டை உடைத்து விட்டதால் இனிமேல் உனக்கு வேறு பேட் தர மாட்டேன் என்று ரிங்கு சிங்கிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இது பற்றி கொல்கத்தா அணி நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அவர்கள் பேசிக்கொண்ட உரையாடல்கள் பின்வருமாறு.
ரிங்கு: நீங்கள் கொடுத்த பேட்டை நான் ஸ்பின்னருக்கு எதிராக விளையாடும் போது உடைத்து விட்டேன்
விராட்: என்னுடைய பேட்டா?
ரிங்கு: ஆம்
விராட்: ஸ்பின்னருக்கு எதிராக அதை நீ உடைத்தாயா? எங்கே உடைத்தது?
ரிங்கு: நடுப்பகுதியில் உடைந்தது

- Advertisement -

விராட்: அதற்காக நான் என்ன செய்ய முடியும்?
ரிங்கு: ஒன்றுமில்லை பாய். உங்களிடம் சொல்கிறேன் அவ்வளவு தான்.
விராட்: “பரவாயில்லை. நீ என்னிடம் சொன்னாய். ஆனால் இந்த தகவல் எனக்குத் தேவையில்லை” (அப்போது ரிங்கு சிங் தம்முடைய கையில் வைத்திருந்த விராட் கோலியின் வேறு 2 பேட்டுகளால் பந்துகளை அடித்தார்)
விராட்: இந்த பேட் நன்றாக இல்லை
ரிங்கு: நீங்கள் ஒன்றைத் தருகிறீர்களா?
விராட்: யாருக்கு தரவேண்டும்

இதையும் படிங்க: 90க்கு ஆல் அவுட்.. நியூஸிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்.. கிங் கோலியை முந்தி ரிஸ்வான் உலக சாதனை

ரிங்கு: நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் (கையில் வைத்திருந்த 2 பேட்டையும் விராட் கோலியிடம் கொடுத்த ரிங்கு)
விராட்: என்னிடம் கடந்த போட்டியில் நீ ஒரு பேட் பெற்றாய். தற்போது இரண்டாவது போட்டியில் மற்றொரு பேட் கேட்கிறாய்? அதற்கான சில பின்விளைவுகளை நான் சந்திக்கிறேன். சத்தியமாக இனிமேல் பேட்டை உடைக்காதே (என்று சொல்லி விட்டு ரிங்கு கொடுத்த தனது 2 பேட்டுகளையும் விராட் கோலி வாங்கிக் கொண்டு சென்றார்)

Advertisement