இது ஆரம்பம் தான் கஷ்டப்படாதீங்க.. ரிங்கு சிங் குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக கூறிய – சவுரவ் கங்குலி

Ganguly-and-Rinku
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த அணித்தேர்வு குறித்து தான் தற்போது பலரும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் அறிவிக்கப்பட்ட இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பினிஷரான ரிங்கு சிங்கிற்கு முதன்மை அணியில் இடம் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

15 பேர் கொண்ட முதன்மை அணியில் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றதால் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரிங்கு சிங்-க்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பி.சி.சி.ஐ-யின் தலைவருமான சௌரவ் கங்குலி ரிங்கு சிங்கின் இந்த நிலைமை குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகள். அங்குள்ள ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சுக்கு தான் அதிக சாதகம் இருப்பதனாலே தேர்வாளர்கள் கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் செல்ல விரும்பியுள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாமல் போயிருக்கலாம். ஆனால் இது குறித்து அவர் கவலைப்பட தேவையில்லை. இது தொடக்கம் தான் அவர் இதற்காக அவர் மனம் தளரக்கூடாது. நிச்சயம் அவரைப் போன்ற சிறப்பான வீரர்கள் வருங்காலத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து பெரிய இடத்திற்கு செல்ல முடியும். எனவே இந்த அணித்தேர்வு குறித்து எதுவும் நினைக்காமல் அவர் தனது இயல்பான நிலையில் பயிற்சிகளை தொடர வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 57/5 என விழுந்த கொல்கத்தாவை காப்பாற்றிய வெங்கடேஷ் ஐயர்.. மீண்டும் மிரட்டிய பும்ரா முதல் இந்தியராக சாதனை

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட அனைவருமே மேட்ச் வின்னர்கள் தான். என்னை பொருத்தவரை தற்போதைய அணி மிகச் சிறப்பு அணி என்று கருதுகிறேன். ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்வார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement