மும்பை அணிக்காக தீயாக வேலை செய்த அம்பயர்? நேரலையில் சிக்கியதால் ஆதாரத்துடன் விளாசும் ரசிகர்கள்

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரின் 51வது லீக் போட்டியில் மும்பையை 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. மே மூன்றாம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70, மணிஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்தனர்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக துசாரா மற்றும் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தனர். பின்னர் சேசிங் செய்த மும்பை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. ரோஹித் சர்மா, இசான் கிசான், கேப்டன் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

தீயாக ஓடிய அம்பயர்:.
கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 7வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. மறுபுறம் 8வது தோல்வியை பதிவு செய்த மும்பை லீக் சுற்றுடன் வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது. முன்னதாக இந்த வருடம் பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை அணிக்கு சாதகமாக அம்பயர் டாஸ் மாற்றியதை ரசிகர்கள் வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினர்.

குறிப்பாக டாஸ் விழுந்ததும் அதை அப்படியே எடுக்காமல் நாணயத்தின் மேலே கையை வைத்து தலைகீழாக எடுத்து மும்பை டாஸ் வென்றதாக நடுவர் அறிவித்தார். அதை அப்போது அறியாத பெங்களூரு கேப்டன் டு பிளேஸிஸ் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் செய்ததை பார்த்து தெரிந்து கொண்டு அடுத்த போட்டியில் ஹைதெராபாத் கேப்டன் பட் கமின்ஸிடம் பரிதாபத்துடன் சொன்னார். அது சர்ச்சையை ஏற்படுத்தியதால் மும்பை – பஞ்சாப் போட்டியில் டாஸ் என்ன விழுந்தது என்பதை கேமராமேன் அருகே சென்று அனைவருக்கும் காண்பித்தார்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் வழக்கத்திற்கு மாறாக ஹர்திக் பாண்டியா நாணயத்தை உயரமாக தூக்கி எறிந்தார். அதனால் அது பிட்ச்க்கு வெளியே சென்று விழுந்தது. ஆனால் அப்போது அந்த நாணயத்தில் பூ விழுந்ததா? தலை விழுந்ததா? என்பதை கேமராமேன் காண்பிப்பதற்கு முன்பாகவே அம்பயர் வேகமாக ஓடிச் சென்று கையிலெடுத்து மும்பை டாஸ் வென்றதாக அறிவித்தார். குறிப்பாக நாணயத்தை அப்படியே எடுக்காமல் மேலே கையை வைத்து தலைகீழாக எடுத்து மும்பை வென்றதாக அம்பயர் அறிவித்தார்.

இதையும் படிங்க: இப்படி விளையாடுனா எப்படி ஜெயிக்க முடியும். மோசமான தோல்விக்கு பிறகு கடுப்பாகி பேசிய – ஹார்டிக் பாண்டியா

அதன் காரணமாக என்ன விழுந்தது என்பதை கேமராமேனும் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் பார்க்கும் வாய்ப்பை இழந்தனர். அந்த வகையில் இந்த வாழ்வா – சாவா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக தீயாக ஓடி வேலை செய்த அம்பயர் மும்பைக்கு சாதகமாக டாஸ் முடிவை மாற்றியதாக ரசிகர்கள் தற்போது வீடியோ ஆதாரத்துடன் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement