மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-ஆவது லீக் போட்டியில் விளையாடிய ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது பத்தாவது தோல்வியை பதிவு செய்து கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது.
பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே குவித்ததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் :
உண்மையிலேயே இந்த தொடரின் ஆரம்பத்தில் எங்களுக்கு சில ஏமாற்றமான போட்டிகள் அமைந்தன. இருப்பினும் தற்போது இந்த தொடரின் கடைசி கட்டத்தில் நாங்கள் பலமான அணியாக அனைத்து துறைகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளோம்.
அணியில் உள்ள ஒரு சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் எங்களால் ஒட்டுமொத்தமான சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் இன்று நாங்கள் பெற்ற இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற ஒரு ஆட்டத்தை தான் நாங்கள் விளையாட நினைத்தோம். ஆனால் இந்த தொடரின் ஆரம்பத்தில் அது முடியாமல் போனது.
இதையும் படிங்க : இது வேறையா? 2025 ஐபிஎல் தொடரில் விளையாட இப்போதே ஹர்டிக் பாண்டியாவுக்கு தடை.. துரத்தும் சோகம்
லக்னோ அணியில் ஏகப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. மோர்னே மோர்கல் தலைமையில் அவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்று வருகின்றனர். நிக்கோலஸ் பூரான் இந்த போட்டியில் எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் போன்ற ஒரு வீரர் சிறப்பான பங்களிப்பை வழங்கினால் நிச்சயம் எப்படிப்பட்ட அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.



