தோனி – ஜிதேஷ் சர்மா ஆகியோர் ஜோடியாக இணைந்து படைத்த மோசமான சாதனை – 12 வருடத்தில் இதுவே முதல்முறை

Dhoni-and-Jitesh
- Advertisement -

தரம்சாலா நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியது.

அதோடு இந்த வெற்றியின் மூலம் சி.எஸ்.கே அணியானது தற்போது நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. அதேவேளையில் தோல்வியை சந்தித்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது கிட்டத்தட்ட தங்களது பிளேஆப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் சார்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி மற்றும் பஞ்சாப் அணி சார்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரும் இணைந்து 12 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை ஒன்றினை சமன் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. இந்த போட்டியின் போது ஒன்பதாவது வீரராக மைதானத்திற்குள் வந்த தோனி ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே கிளீன் போல்டாகி கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறி இருந்தார்.

- Advertisement -

அதேபோன்று 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை பஞ்சாப் அணி துரத்தியபோது ஆறாவது வீரராக களத்திற்குள் வந்த பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா சிமர்ஜீத் சிங் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறி இருந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 12 ஆண்டுகள் கழித்து ஒரு போட்டியில் இரண்டு அணிகளை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும் கோல்டன் டக் அவுட் ஆகியிருப்பது மோசமான சாதனையாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : ராகுல் டிராவிட்டிடம் ஸ்ரீசாந்த் சொன்ன பொய் தான்.. ராஜஸ்தான் கேப்டனாக காரணம்.. சஞ்சு சாம்சன் பேட்டி

இதற்கு முன்னதாக கடந்த 2012-ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இரு அணிகளை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும் கோல்டன் டக் அவுட்டாகி இருந்தனர். அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து தற்போது தோனி மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் இந்த மோசமான சாதனையை சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement