- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்க 3 பேரும் முடிஞ்ச அளவு போராடுனாங்க.. லார்ட்ஸ் தோல்விக்கு ஆறுதல் கூறிய – சச்சின் டெண்டுல்கர்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இந்திய அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி போராடிய விதம் அருமை : சச்சின் டெண்டுல்கர்

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சரியாக 387 ரன்களை குவித்திருந்தனர். அதன் பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியானது 192 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதனால் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை இந்திய அணி எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இங்கிலாந்து அணியின் அற்புதமான பந்துவீச்சு காரணமாக இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி பெரிய சரிவை சந்தித்தது.

பின்னர் இறுதி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சாளர்களை வைத்து எவ்வளவோ போராடியும் இறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வி வருத்தம் அளித்தாலும் இந்திய வீரர்கள் போராடிய விதம் பாராட்டுக்குரியது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டதாவது : இலக்கிற்கு மிக அருகில் வந்து போட்டியை இழந்துள்ளோம். ஆனாலும் ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் கடைசிவரை போராடினார்கள். இது நல்ல முயற்சி.

இதையும் படிங்க : 100 ஆவது டெஸ்ட் போட்டியில் வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்திய மிட்சல் ஸ்டார்க் – விவரம் இதோ

அதேபோன்று இங்கிலாந்து வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை அழுத்தத்தில் வைத்ததாலே அவர்களால் இந்த முடிவை பெற முடிந்தது. வெற்றிபெற்ற அவர்களுக்கும் வாழ்த்துக்கள் என சச்சின் டெண்டுல்கர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -