- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அபிஷேக் சர்மாவை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் உச்சம் தொட்ட இஷான் கிஷன் – விவரம் இதோ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிந்த கையோடு புதிய டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அபிஷேக் சர்மாவை பின்னுக்கு தள்ளிய இஷான் கிஷன் :

அப்படி வெளியான புதிய பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் கடந்த 12 மாதங்களாக முதலிடத்தில் இருந்து வந்த அபிஷேக் ஷர்மா தனது முதல் இடத்தை இழந்துள்ளார். அதிரடி துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா கடந்த ஓராண்டாக முதலிடத்தில் நீடித்து வந்த வேளையில் அவரை மற்றொரு சக இந்திய வீரரான இஷான் கிஷன் 7 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

- Advertisement -

கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் கம்பேக் கொடுத்த இஷான் கிஷன் 2026 டி20 உலககோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 317 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியின் போது அவரது அற்புதமான இன்னிங்ஸ் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் பார்க்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷன் அபிஷேக் சர்மாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை கிஷான் கிஷன் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்றைய போட்டியில் அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி.. வெளியேறப்போகும் வீரர் யார்? – விவரம் இதோ

இவருக்கு முன்னதாக டி20 போட்டிகளின் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் பிடித்திருந்த வேளையில் நான்காவது இந்திய வீரராக அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -