- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆவாரா? – ஷ்ரேயாஸ் ஐயர் பதில்

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் கொண்டுள்ள இந்திய அணி அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் :

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது ஜூலை ஒன்றாம் தேதியான இன்று முதல் துவங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியின் போது இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்குமா? என்பதே பலரது கேள்வியாகவும் இருக்கிறது.

- Advertisement -

ஏனெனில் அயர்லாந்து தொடரின் போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவ்வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவருக்கு இடம் வழங்க வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுக வாய்ப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : என்ன நடக்கிறது? என்பது யாருக்கும் தெரியாது. எங்களது அணியின் திட்டம் குறித்து இப்போது நாங்கள் எதையும் சொல்ல முடியாது. அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். டி20 உலக கோப்பையை வென்ற வீரர்கள் அணியின் முக்கிய தூண்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் உச்சம் தொட்ட இஷான் கிஷன் – விவரம் இதோ

அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். வைபவ் சூரியவன்ஷி திறமையான வீரர் தான் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவருக்கு சரியான நேரம் வரும்போது வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -