வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
100 ஆவது டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திய மிட்சல் ஸ்டார்க் :
அந்த வகையில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 225 ரன்கள் குவித்தது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 82 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 121 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.
இதன் காரணமாக 82 முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 121 ரன்கள் குவித்தது. அதனால் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு சுருண்டதால் 176 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக விளையாடிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டை மட்டும் கைப்பற்றி இருந்தாலும் இரண்டாவது இன்னிங்சின் போது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தனது நூறாவது போட்டியில் விளையாடிய மிட்சல் ஸ்டார்க் இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை குவித்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.
அதுமட்டுமின்றி இந்த தொடரிலும் அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தால் அவருக்கு தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது. அதோடு தனது 100-ஆவது போட்டியில் விளையாடிய அவர் சில சாதனைகளையும் நிகழ்த்தி இருந்தார். அந்த வகையில் இந்த போட்டியின் போது வெறும் 15 பந்துகளிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேகமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.
இதையும் படிங்க : அவர் எடுத்து கொடுத்த அந்த 2 விக்கெட் தான் இந்திய அணியை வீழ்த்த காரணம் – பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சி
அதுமட்டும் இன்றி அவர் இந்த போட்டியில் எடுத்த 7 விக்கெட்டுகளின் மூலம் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 402 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதன்மூலம் ஆஸ்திரேலியா அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக அவர் கிளன் மெக்ராத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



