மேற்கு இந்தியர்கள்ன்னா சும்மாவா.. இதான் முக்கியம்.. தோணும் போது சான்ஸ் கொடுங்க.. ரோவ்மன் போவல் பேட்டி

Rovman Powell
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 27வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் போராடி 20 ஓவரில் 147/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அசுடோஸ் சர்மா 31 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

பின்னர் 148 ரன்களை சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 39, டானுஷ் கோட்டியான் 24, ரியன் பராக் 23, கேப்டன் சஞ்சு சாம்சன் 18, துருவ் ஜுரேல் 6 ரன்களில் அவுட்டானதால் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் கடைசி நேரத்தில் வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவல் 2 சிக்சரை பறக்க விட்டு 11 (5) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

அதிரடி வீரர்கள்:
அவருடன் சேர்ந்து விளையாடிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையர் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 27* (10) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். குறிப்பாக கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது 2 சிக்சரை பறக்க விட்ட அவர் ராஜஸ்தானுக்கு த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாம் கரண், ரபாடா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் ஹெட்மயர் போன்ற மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வீரர்கள் பவுண்டரி ஹிட்டர்கள் என்று ரோவ்மன் போவல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அசத்துவதற்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கும் அவர் இப்போட்டியில் கிடைத்த 2 புள்ளிகள் முக்கியம் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கண்டிப்பாக 2 புள்ளிகளை பெற்றது முக்கியம். அதற்கான பாராட்டுக்கள் எங்களுடைய வீரர்களை சேரும். ஹெட்மயரும் நானும் அமைதியாக இருந்தோம். வேகமாக ரன்கள் ஓட வேண்டும் என்று பேசிக் கொண்டோம். வெஸ்ட் இந்தியர்களான நாங்கள் பவுண்டரி ஹிட்டர்கள். அது சவாலானதாகும். ஆனால் அதை செய்வதற்காகவே நாங்கள் கிரிக்கெட்டர்களாக உள்ளோம்”

இதையும் படிங்க: 5வது பந்தில் சூப்பர் ஓவர் பற்றி போல்ட்’டிடம் அதை சொன்னேன்.. ஐபிஎல் தான் எஞ்சாய்மெண்ட்.. ஹெட்மயர் பேட்டி

“பட்லர் மீண்டும் விளையாடுவதற்கு தேவையான வேலைகளை எங்களுடைய பயிற்சியாளர்கள் செய்கின்றனர். எனவே அவர் இன்னும் சில நாட்களில் விளையாட வருவார். அடுத்த போட்டிக்காக இன்னும் எங்களுக்கு 3 – 4 நாட்கள் உள்ளது. எனவே அவர் அதற்குள் குணமடைந்து வருவார். நான் நல்ல வீரர். ஒருவேளை எனக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எங்களுடைய அணி நன்றாக செயல்படுகிறது அன்று அர்த்தம். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது என்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க முயற்சிக்கிறேன்” என்று கூறினார்

Advertisement