- Advertisement -
ஐ.பி.எல்

30 நாட்கள் தவம்.. காட்டடி ஹைதெராபாத் அணியை அடக்கிய ஆர்சிபி.. சிஎஸ்கே, மும்பையால் முடியாத மாஸ் வெற்றி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் 41வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் பெங்களூரு அணி ஹைதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் டு பிளேஸிஸ் 25 (12) ரன்களில் நடராஜன் வேகத்தில் அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் விராட் கோலி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் அந்த வில் ஜேக்ஸ் 6 ரன்னில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 50 (20) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் சற்று தடுமாற்றமாக விளையாடிய விராட் கோலி 51 (43) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடக்கிய ஆர்சிபி:
அதற்கடுத்ததாக வந்த கேமரூன் கிரீன் 5 பவுண்டரியுடன் 37 (20) ரன்கள் குவித்து அசத்தினர். ஆனால் எதிர்புறம் கடைசிக்கட்ட ஓவர்களில் மகிபால் லோம்ரர் 7, தினேஷ் கார்த்திக் 11, ஸ்வப்னில் சிங் 12 ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் 20 ஓவரில் பெங்களூரு 206/7 ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 2, ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 207 ரன்களை துரத்திய ஹைதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே வில் ஜேக்ஸ்க்கு எதிராக டிராவிஸ் ஹெட் 1 (3) ரன்னில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் காட்டுதனமாக அடித்த அபிஷேக் ஷர்மா 31 (13) ரன்களில் யாஷ் தயாள் வேகத்தில் அவுட்டானார். அதை விட அடுத்ததாக வந்த ஐடன் மார்க்கம் 7, ஹென்றிச் க்ளாஸென் 7 என 2 காட்டடி வீரர்களை ஸ்வப்னில் சிங் ஓவரில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி திருப்புமுனையை உண்டாக்கினார்.

- Advertisement -

போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த நிதிஷ் ரெட்டியும் 13 ரன்களில் ஆட்டமிழந்ததால் 69/5 என ஆரம்பத்திலேயே ஹைதராபாத் சரிந்தது. அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த அப்துல் சமத் 10 ரன்னில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் பட் கமின்ஸ் 31 (15) ரன்களில் கேமரூன் கிரீன் வேகத்தில் ஆட்டமிழந்தார். அதனால் பெரிய சரிவை சந்தித்த ஹைதராபாத்துக்கு கடைசியில் சபாஷ் அகமது 40* (37) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 171/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கரண் சர்மா, கேமரா கிரீன், ஸ்வப்னில் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். குறிப்பாக மார்ச் 25ஆம் தேதி பஞ்சாப்பை வீழ்த்திய அந்த அணி அதன் பின் 6 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. தற்போது தவமாய் இருந்து அதை நிறுத்தியுள்ள பெங்களூரு மிகச் சரியாக 30 நாட்கள் கழித்து ஏப்ரல் 25ஆம் தேதி தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

இதையும் படிங்க: காசி விஸ்வநாதன் இடத்திற்கு வரப்போகும் தல தோனி.. சி.எஸ்.கே நிர்வாகத்தில் ஏற்படப்போகும் – மிகப்பெரிய மாற்றம்

அத்துடன் மும்பை, சென்னை போன்ற வலுவான அணிகளையே காட்டுதனமாக அடித்து வந்த ஹைதராபாத்தை இந்த சீசனில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த அணி என்ற பெருமையும் பெற்றுள்ளது. அந்த வகையில் 287 ரன்கள் விளாசி மோசமான தோல்வியை பரிசளித்த ஹைதெராபாத்துக்கு கொடுத்த ஆர்சிபி பழி தீர்த்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -