- Advertisement -
ஐ.பி.எல்

மேட்ச் பகலில் நடந்ததால் அது எங்களுக்கு தெரிஞ்சுடுச்சு.. இது தான் என்னோட வேலை.. ஜடேஜா பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 53வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. தரம்சாலாவில் மே ஐந்தாம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 167/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43, கேப்டன் ருதுராஜ் 32, டேரில் மிட்சேல் 30 ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹர் 3, ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 168 ரன்களை துரத்திய பஞ்சாப் ஆரம்ப முதலே சென்னை பவுலர்களின் தரமான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் 20 ஓவரில் 139/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சஷாங் சிங் 27, பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ஆட்டநாயகன் ஜடேஜா:
இதனால் 3 வருடங்கள் 5 தொடர்ச்சியான தோல்விகளுக்கு பின் பஞ்சாப்பை முதல் முறையாக தோற்கடித்து சென்னை வெற்றி கண்டது. இதையும் சேர்த்து 11 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்த சென்னை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இந்த வெற்றிக்கு 43 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பகல் நேரத்தில் போட்டி நடைபெற்றதால் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்பதை பார்த்து தெரிந்து கொண்டதாக ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். அத்துடன் விக்கெட்டுகள் விழும் போது பார்ட்னர்ஷிப் அமைப்பதே தனது வேலை என்று தெரிவிக்கும் அவர் தெரியாத பிட்ச்சில் சிஎஸ்கே பவுலர்கள் அசத்தியதாக பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பகல் நேரத்தில் போட்டி நடைபெற்றதால் பிட்ச் ஸ்லோவாக இருந்தது. அது கொஞ்சம் சூடாக இருந்ததால் ஸ்லோவாக இருக்கும் என்று நாங்களும் எதிர்பார்த்தோம். விக்கெட்டுகள் விழுந்த போது 30 – 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசியில் பவுலர்களுக்கு போதுமான இலக்கை கொடுக்க விரும்பினோம். எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்”

இதையும் படிங்க: 1115 நாட்கள்.. ஜடேஜா மேஜிக்.. பஞ்சாப்பை சாய்த்த சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் அதிரடி ஏற்றம்.. முதல் வீரராக அபார தோனி

“பவர் பிளே ஓவர்களில் பிட்ச் எப்போதும் பிளாட்டாக இருப்பது போல் தெரியும். ஆனால் பந்து பழையதாக மாறியதும் அது நன்றாக வராது. புதிய மைதானத்தில் நீங்கள் விளையாடும் போது பிட்ச் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. நாங்கள் 15 – 20 ரன்கள் விரைவாக எடுத்ததாக கருதினோம். ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்தால் பார்ட்னர்ஷிப் அமைப்பதே என்னுடைய வேலையாகும்” என்று கூறினார்.

- Advertisement -