காசி விஸ்வநாதன் இடத்திற்கு வரப்போகும் தல தோனி.. சி.எஸ்.கே நிர்வாகத்தில் ஏற்படப்போகும் – மிகப்பெரிய மாற்றம்

Kasi-Dhoni
- Advertisement -

சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரோடு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 42 வயதை எட்டியுள்ள மகேந்திர சிங் தோனி ஏற்கனவே சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் என்கிற பெயரை எடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

கடந்த சில ஆண்டுகளாகவே ருதுராஜ் கெய்க்வாட்டை அடுத்த கேப்டனாக தயார்படுத்தி வந்த தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாட்டை புதிய கேப்டனாக நியமித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து சி.எஸ்.கே அணியின் முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் முதல் 8 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி மற்றும் 4 வெற்றிகள் என 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் இறுதியில் தோனி ஓய்வை அறிவிக்கும் பட்சத்தில் அடுத்ததாக சிஎஸ்கே அணியுடன் தான் தொடர்வார் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி தற்போது அண்மையில் வெளியான தகவலின் படி :

- Advertisement -

சிஎஸ்கே அணியின் உரிமையாளரான சீனிவாசன் தோனியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதால் இந்த சீசனுடன் தோனி ஓய்வை அறிவித்தாலும் அடுத்த சீசனில் இருந்து சிஎஸ்கே அணியின் ஆலோசகராக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே சச்சின், கம்பீர் போன்ற வீரர்கள் ஆலோசகராக செயல்பட்டு வரும் வேளையில் தோனியும் அணியின் ஆலோசராக தொடர்ந்து பயணிப்பார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : சாம்சன், ராகுல், பண்ட் ஆகியோரில்.. 2024 டி20 உ.கோ வெல்ல தேவையான தரமான கீப்பர் யார்? மஞ்ரேக்கர் தேர்வு

இல்லையெனில் ஓய்வுக்கு பிறகு சிஎஸ்கே அணியின் சிஇஓ பதவிக்கும் தோனி வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் தற்போதைய சிஎஸ்கே அணியின் சிஇஓ-வாக இருக்கும் காசி விஸ்வநாதனுக்கு வேறு பொறுப்பை வழங்கி அவருக்கு பதிலாக தோனி சி.இ.ஓ-வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement