- Advertisement -
ஐ.பி.எல்

10 டாஸ் தோத்தா என்ன? இதை சாதிச்சுருக்கேன்.. முஸ்தபிசூருக்கு பதிலாக அசத்தல் வீரரை கொண்டு வந்த ருதுராஜ்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஐந்தாம் தேதி மதியம் 3.30 மணிக்கு தரம்சாலாவில் 53வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் கடந்த போட்டியில் தோல்வியை கொடுத்த பஞ்சாப் அணியை அதனுடைய சொந்த மண்ணில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. இதுவரை 10 போட்டிகளில் 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள சென்னை பிளே ஆஃப் செல்வதற்கு இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

அந்த நிலையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனால் ஏற்கனவே 9 முறை தோல்வியை சந்தித்திருந்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இதையும் சேர்த்து இந்த வருடம் 10வது முறையாக டாஸ் வீசுவதில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தார். அதற்காக ஏற்கனவே பயிற்சி எடுப்பதாக தெரிவித்த அவர் களத்தில் தமக்கு டாஸ் சாதகமாக விழவில்லை என்று பரிதாபத்துடன் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

டாஸ் தோற்றால் என்ன:
அந்த சூழ்நிலையில் இப்போட்டியிலும் டாஸ் அதிர்ஷ்டம் அவருக்கு கிடைக்காதது பல ரசிகர்களையே பரிதாபப்பட வைத்தது. இருப்பினும் முதல் 10 போட்டிகளில் ஒரு முறை மட்டுமே டாஸ் வென்ற தமது தலைமையில் சென்னை ஏற்கனவே 5 வெற்றிகளை பெற்றதை நேர்மறையாக எடுத்துக் கொள்வதாக ருதுராஜ் தெரிவித்தார்.

அத்துடன் சென்னை அணியிலிருந்து வெளியேறியுள்ள வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு பதிலாக நியூசிலாந்தைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மிட்சேல் சான்ட்னர் சேர்க்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். கடந்த வருடங்களில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி சென்னை அணியின் வெற்றிகளில் பங்காற்றிய அவருக்கு காம்பினேஷன் காரணமாக இந்த வருடம் ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

ஆனால் இவரை எதற்காக வைத்திருக்கிறீர்கள் என்று பலமுறை சிஎஸ்கே ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் அவரை சேர்த்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் இது பற்றி பேசியது பின்வருமாறு. ” நாங்கள் எங்கள் செயல்பாட்டில் ஒட்டிக் கொண்டிருக்கிறோம். சில விஷயங்களை சரியாக செய்கிறோம். எதிரணிகளின் சாதனைகளை பார்க்காமல் நம்மால் சரியாக என்ன செய்ய முடியும் என்பதை பார்க்கிறோம்”

இதையும் படிங்க: 3 வருடமாக திணறும் மஞ்சள் படை.. தோற்க விரும்பும் 9 அணி ரசிகர்கள்.. 2010 மேஜிக் நிகழ்த்துமா சிஎஸ்கே?

“இந்த சீசனில் நிறைய காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அணியில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. நான் 10 டாஸ்களை இழந்தாலும் 5 வெற்றிகளை பெற்றுள்ளதை சாதகமானது என்று கூறுவேன். முஸ்தபிசுருக்கு பதிலாக சான்ட்னர் அணிக்குள் விளையாட வருகிறார்” என்று கூறினார். இருப்பினும் பதிரனா சென்னை அணிக்காக இப்போட்டியிலும் விளையாடவில்லை. மற்றபடி கடந்த போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் இப்போட்டியிலும் விளையாடுகின்றனர்.

- Advertisement -