- Advertisement -
ஐ.பி.எல்

1115 நாட்கள்.. ஜடேஜா மேஜிக்.. பஞ்சாப்பை சாய்த்த சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் அதிரடி ஏற்றம்.. முதல் வீரராக அபார தோனி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஐந்தாம் தேதி மதியம் 3.30 மணிக்கு தரம்சாலாவில் 53வது லீக் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு ரகானே 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதே போல மறுபுறம் அசத்திய கேப்டன் ருதுராஜ் கைக்வாட் 32 (21) ரன்களில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே கோல்டன் டக் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த டேரில் மிட்சேல் 30 (19) ரன்களில் அவுட்டானதால் 75/5 என சென்னை தடுமாறியது. அப்போது ரவீந்திர ஜடேஜா நிதானமாக விளையாட முயற்சித்த நிலையில் எதிர்புறம் தடுமாறிய மொயின் அலி 17 (20) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

1115 நாட்கள்:
அதே போல அடுத்ததாக வந்த மிட்சேல் சான்ட்னர் 11 (11) ரன்னில் அவுட்டாகி சென்றார். அடுத்ததாக வந்த சர்துல் தாக்கூர் 17 (11) ரன்னில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி கோல்டன் டக் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இறுதியில் ரவீந்திர ஜடேஜாவும் 43 ரன்னில் போராடி அவுட்டானதால் 20 ஓவரில் சென்னை 167/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹர், ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 168 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்ட்டோவை 7 ரன்னில் காலி செய்த துசார் தேஷ்பாண்டே அடுத்ததாக வந்த ரிலீ ரோசவை டக் அவுட்டாக்கினார். அதனால் 9/2 என தடுமாறிய பஞ்சாப்புக்கு அடுத்ததாக வந்த சசாங் சிங் மற்றொரு துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங்குடன் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற போராடினார்.

- Advertisement -

ஆனால் அதில் பிரப்சிம்ரன் 30 (23) ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கிய நிலையில் அடுத்த ஓவரிலேயே சஸாங் சிங் 27 (20) ரன்களில் மிட்சேல் சான்ட்னர் சுழலில் அவுட்டானார். அப்போது வந்த ஜிதேஷ் சர்மா கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் திணறிய கேப்டன் ஷாம் கரன் 7 ரன்னில் ஜடேஜா சுழலில் சிக்கினார். இறுதியில் ப்ரார் 17*, ஹர்சல் பட்டேல் 12, ரபாடா 11*, ராகுல் சஹர் 16 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் பஞ்சாப் 139/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனால் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, துஷார் தேஷ்பாண்டே 2, சிமர்ஜித் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குறிப்பாக ஜடேஜா 43 ரன்கள் – 3 விக்கெட்டுகள் எடுத்த மேஜிக்கில் 2021க்குப்பின் 1115 நாட்கள் கழித்து 5 தொடர் தோல்விகளுக்கு பின் பஞ்சாப்பை தோற்கடித்து சென்னை வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 53/5 என திணறல்.. துபே, தோனி கோல்டன் டக்.. பஞ்சாப்பிடம் மீண்டும் அடிபணிந்த சிஎஸ்கே? ரசிகர்கள் கவலை

இதனால் 11 போட்டியில் 6வது வெற்றியை பதிவு செய்த சென்னை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மேலும் இப்போட்டியில் சிமர்ஜித் சிங் வேகத்தில் ஜிதேஷ் சர்மா கொடுத்த கேட்சை பிடித்த எம்எஸ் தோனி ஐபிஎல் வரலாற்றில் 150 கேட்ச்கள் பிடித்த முதல் வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -