
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 26 ஆம் தேதி ஜெய்ப்பூரில் முக்கியமான 69வது நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் மும்பைக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை 20 ஓவரில் போராடி 184/7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 27, ரிக்கல்டன் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் அரை சதத்தை அடித்து 57 (39) ரன்கள் குவித்து போராடினார். இருப்பினும் எதிர்ப்புறம் திலக் வர்மா 1, வில் ஜேக்ஸ் 17 ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தனர். இறுதியில் ஹர்திக் பாண்டியா 26 (15), நமன் திர் 20 (12) ரன்களில் ரன்கள் எடுத்து ஓரளவு ஃபினிஷிங் கொடுத்தார்கள்.
பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன், விஜயகுமார் வைசக், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய பஞ்சாப்புக்கு பிரப்சிம்ரன் சிங் 13 (16) ரன்னில் தடுமாறி விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபுறம் அடித்து நொறுக்கிய பிரியான்ஸ் ஆர்யா வேகமாக ரன்கள் குவித்தார்.
அவருடன் அடுத்ததாக களமிறங்கிய ஜோஸ் இங்லீஷ் தம்முடைய பங்கிற்கு மும்பை பவுலர்களை வெளுத்து வாங்கி ரன்களை சேர்த்தார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி பஞ்சாப்பை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது. அதில் ஆர்யா அரை சதத்தை அடித்து 62 (35) ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய இங்கிலீஷ் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து 73 (42) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 26* (16) ரன்கள் எடுத்த உதவியுடன் 18.3 ஓவரிலேயே 187/3 ரன்களை எடுத்த பஞ்சாப் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றில் அதிர்ஷ்டமிக்க குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது.
இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்த சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ
அந்தப் போட்டியில் வென்றால் நேரடியாக பஞ்சாப் ஃபைனல் செல்லலாம். இல்லையென்றாலும் எலிமினேட்டரில் வென்று வரும் அணியுடன் குவாலிஃபயர் 2 போட்டியில் மோதி மீண்டும் ஃபைனல் செல்லும் வாய்ப்பை பெறலாம். அப்படிப்பட்ட பொன்னான குவாலிபயர் 1 போட்டிக்கு 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் தகுதி பெற்று பஞ்சாப் சாதனை படைத்துள்ளது. மறுபுறம் சான்ட்னர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் மும்பை 4வது இடத்தை மட்டுமே பிடித்து எலிமினேட்டர் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.