சச்சின் டெண்டுல்கரின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்த சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

Sachin and SKY
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து படுமோசமாக இந்த தொடரை துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது அதன் பின்னர் அடுத்தடுத்து ஆறு வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்திருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த பலமான கம்பேக் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சூரியகுமார் யாதவ் :

இந்த தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது 8 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. இவ்வேளையில் மே 26-ஆம் தேதியான இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 39 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 57 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். அவர் அடித்த இந்த ரன்களின் மூலம் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றினையும் அவர் முறியடித்துள்ளார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2010-ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் மும்பை அணிக்காக 618 ரன்களை அடித்திருந்தார். அதுவே மும்பை அணியின் வீரர் ஒருவர் ஒரு சீசனில் அடித்த அதிக ரன்களாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவ் இன்றைய போட்டியின் மூலம் சச்சினின் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : டெஸ்ட் மட்டும் போதாது.. எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு.. கம்பேக் குறித்து – கே.எல் ராகுல் விருப்பம்

பஞ்சாப் அணிக்கெதிரான இந்த போட்டியில் 36 ரன்களை எட்டிய போது சச்சினை தாண்டி 619 ரன்களை குவித்து மும்பை அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் 15 ஆண்டுகால சாதனையை சூரியகுமார் யாதவ் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement