LSG vs PBKS : பரபரப்பான போட்டியில் அதிரடி பினிஷிங் கொடுத்த தமிழகத்தின் ஷாருக்கான், கேப்டனால் லக்னோ தோற்றதா?

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் இருக்கும் அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற 21வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் ஷிகர் தவான் காயமடைந்ததால் ஆச்சரியப்படும் வகையில் பஞ்சாப்பின் கேப்டனாக செயல்பட்ட சாம் கரண் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு பவர் பிளே ஓவர்களில் விரைவாக ரன்களை சேர்த்து கேஎல் ராகுலுடன் 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கெய்ல் மேயர்ஸ் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 29 (23) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த தீபக் ஹூடா 2 (3) ரன்களில் நடைய கட்டினாலும் அடுத்ததாக களமிறங்கிய க்ருனால் பாண்டியா கேப்டன் ராகுலுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் மெதுவாக விளையாடிய அவரை 17 (18) ரன்களில் காலி செய்த ரபாடா அடுத்து வந்த அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரனை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட ராகுல் அரை சதமடித்த நிலையில் அவருக்கு கை கொடுக்க வேண்டிய மார்க்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாட முயற்சித்து 2 சிக்சருடன் 15 (12) ரன்களில் ஆட்டழந்தார்

- Advertisement -

கடைசியில் அதிரடியை துவக்க முயற்சித்த ராகுல் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 74 (56) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் இதர வீரர்களும் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 20 ஓவர்களில் லக்னோ 159/8 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஷாம் கரண் 3 விக்கெட்டுகளும் ரபாடா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு முதல் ஓவரிலேயே அதர்வா டைடை டக் அவுட்டாக்கிய யுவ்திர் சிங் அடுத்த ஓவரில் பிரப்சிமரன் சிங்கை 4 (4) ரன்களில் காலி செய்தார்.

அதனால் 17/2 என தடுமாறிய பஞ்சாப்பை அதிரடியாக விளையாட முயற்சித்த மேத்யூ சார்ட் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (22) ரன்களிலும் ஹர்ப்ரீத் ப்ரார் 22 (22) ரன்களும் எடுத்துப் போராடி அவுட்டானார்கள். அடுத்த சில ஓவர்களிலேயே கேப்டன் சாம் கரணும் 6 (6) ரன்களில் அவுட்டானதால் பஞ்சாப்பின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் 5வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய நட்சத்திர ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா லக்னோ பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு போராடினார்.

- Advertisement -

அதனால் வெற்றியை நெருங்கிய பஞ்சாப்புக்கு கடைசி 4 ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட போது தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த அவர் முக்கிய நேரத்தில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (41) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது தமிழக வீரர் சாருக்கான் அதிரடியாக 2 சிக்ஸர்களை பறக்க விட்ட போது அவருக்கு உறுது ணையாக நின்ற ஹர்பிரீட் பிரார் 6 (4) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ரவி பிஷ்னோய் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் டபுள் எடுத்த ஷாருக்கான் 2வது பந்திலும் டபுள் எடுத்து 3வது பந்தில் அதிரடியான பவுண்டரியை பறக்க விட்டு 1 பவுண்டரி 2 சிக்சருடன் 23* (10) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். இதற்கு முன் சயீத் முஷ்டாக் அலி கோப்பை ஃபைனலில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழகத்திற்கு கோப்பை வென்று கொடுத்த அவர் இப்போட்டியில் அற்புதமாக பினிஷிங் செய்து 19.3 ஓவரிலேயே பஞ்சாப்பை 161/8 ரன்கள் எடுக்க வைத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

மறுபுறம் ரவி பிஷ்னோய், யுவ்திர் சிங் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்களை எடுத்தும் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுக்க தவறியதால் லக்னோ போராடி தோற்றது. குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் ஒரு கட்டத்திற்கு பின் அதிரடியாக விளையாடத் தடுமாறியாது எதிரில் வந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி அவுட்டாக வைத்தது.

இதையும் படிங்க: LSG vs PBKS : பரபரப்பான போட்டியில் அதிரடி பினிஷிங் கொடுத்த தமிழகத்தின் ஷாருக்கான், கேப்டனால் லக்னோ தோற்றதா?

அதை விட 15 ஓவர்களுக்கும் மேல் விளையாடி செட்டிலான அவர் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 18வது ஓவரில் 132 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகி எக்ஸ்ட்ரா 20 ரன்களை எடுக்க தவறியது லக்னோவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Advertisement