IPL 2023 : ஒரே இன்னிங்சில் கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலி என 2 பேரின் சாதனையை காலி செய்த – கே.எல் ராகுல்

KL-Rahul-1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது இன்று லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

LSG vs PBKS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் கே.எல் ராகுல் 74 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதனைத்தொடர்ந்து தற்போது 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் 56 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 74 ரன்கள் குவித்த கே.எல் ராகுல் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் :

KL Rahul

இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் நான்காயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்த கிரிஸ் கெயிலை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். கிரிஸ் கெயில் 112 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் நான்காயிரம் ரன்களை அடித்து அதிவேகமாக ஐபிஎல் போட்டிகளில் நான்காயிரம் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல் தனது 105-ஆவது இன்னிங்ஸ்லேயே அந்த சாதனையை தகர்த்துள்ளார். அதுமட்டும் இன்றி மேலும் ஒரு சாதனையாக பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் சாதனையையும் அவர் உடைத்துள்ளார்.

இதையும் படிங்க : என்னது நான் சாதனைக்காக விளையாடுறேனா? விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி – விவரம் இதோ

அந்த வகையில் ஐ.பி.எல் கேப்டனாக அதிவேகமாக 2000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையில் விராட் கோலி 59 இன்னிங்ஸ்களில் 2000 ரன்கள் எடுத்திருந்த வேளையில் கே.எல் ராகுல் கேப்டனாக இன்று தனது 47-வது இன்னிங்சிலேயே 2000 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement