என்னது நான் சாதனைக்காக விளையாடுறேனா? விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி – விவரம் இதோ

Simon-Doull-and-Kohli
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் தொடரின் 20-ஆவது லீக் போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. அதன்படி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

RCB vs DC

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது. பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே குவித்ததால் பெங்களூர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்காக விராட் கோலி 50 ரன்கள் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பத்திலிருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலியின் மீது முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டவுல் தனது விமர்சனத்தை காட்டமாக முன் வைத்தார். அதில் அவர் விராட் கோலி தனது சொந்த சாதனைகளுக்காக ரன் ரேட்டை பற்றி கவலை படாமல் மெதுவாக ரன் குவிப்பது பெங்களூர் அணியின் தடுமாற்றத்திற்கு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Virat Kohli

மேலும் கடந்த 15-வது லீக் போட்டியில் லக்னோ அணிக்கெதிராக விராட் கோலி விரைவாக 42 ரன்கள் தொட்ட போதும் அரைசதம் அடிப்பதற்காக 10 பந்துகளை எடுத்துக் கொண்டார் என்று விமர்சித்து இருந்தார். இந்நிலையில் அவரது இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி அளித்துள்ள ஒரு பேட்டியில் : முக்கியமான நேரங்களில் நங்கூரமாக விளையாடுவதே தனது வேலை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து விராட் கோலி கூறுகையில் :

- Advertisement -

முக்கியமான நேரங்களில் நங்கூரமாக செயல்படுவது அவசியமாகும். வெளியில் இருந்து விமர்சிப்பவர்களின் கருத்துக்களை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் இருப்பதில்லை. மேலும் போட்டியை அவர்கள் வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்கள். ஆனால் நான் களத்தில் நின்று விளையாடுகிறேன். ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடுவதை பார்க்கும் அவர்கள் திடீரென பவர்பிளே முடிந்ததும் என்னப்பா அதிரடியாக ஆடாமல் ஸ்ட்ரைக் மாற்ற ஆரம்பித்து விடுகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.

இதையும் படிங்க : வீடியோ : பகையுடன் முறைப்பு, கை கொடுத்துக் கொள்ளாத கங்குலி – விராட் கோலி, நேரலையில் அம்பலமான மோதல் – நடந்தது என்ன

ஆனால் பொதுவாக பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் இருந்தால் அதில் சிறப்பாக செயல்படும் தரமான பவுலர்களுக்கு எதிராக கடைசி இரண்டு ஓவர்களில் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியும். அது எஞ்சிய இன்னிங்ஸ்ஸை மிகவும் எளிதாக்கும் அதுதான் எனது திட்டம் என்ன விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement