2025 ஐபிஎல் தொடரில் மும்பை அணியிலிருந்து ரோஹித் மொத்தமாக கழற்றி விடப்படுவாரா? மார்க் பவுச்சர் சூசகம்

Mark Boucher
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சுமாராக விளையாடி முதல் அணியாக வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது. அவருடைய தலைமையில் 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற மும்பை 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

இந்த சூழ்நிலையில் மும்பை அணியிலிருந்து அடுத்த வருடம் ரோகித் சர்மா வெளியேறுவார் என்ற பேச்சுக்களும் எதிர்பார்ப்புகளும் காணப்படுகிறது. ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் இந்தியாவின் கேப்டனாக இருக்கிறார். ஆனால் அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக கேப்டன்ஷிப் பதவியை மும்பை நிர்வாகம் பறித்தது அந்த அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

- Advertisement -

கழற்றி விடப்படும் ரோஹித்:
அதே போல புதிய கேப்டனாக வந்த ஹர்திக் பாண்டியா முதல் போட்டியிலேயே அவரை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு வற்புறுத்தினார். அத்துடன் ரோகித் சர்மா இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு எதிரான கோட்பாட்டை கொண்டுள்ளார். ஆனால் அப்படிப்பட்ட அவரை சமீபத்திய போட்டிகளில் மும்பை நிர்வாகம் வலுக்கட்டாயமாக இம்பேக்ட் வீரராக களமிறக்கியது. அந்த வகையில் ஹைதெராபாத் அணியில் டேவிட் வார்னர் போல கொஞ்சம் கொஞ்சமாக அவமானப்படுத்தி கழற்றி விடும் மும்பை நிர்வாகம் அடுத்த வருடம் நடைபெறும் மெகா ஏலத்தில் மொத்தமாக அவரை விடுவிக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் ரோஹித் சர்மா அடுத்த வருடம் விளையாடுவாரா என்பதை பற்றி முடிவு செய்யவில்லை என மும்பை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த வருடம் நடைபெறும் மெகா ஏலத்தில் அவரை விடுவிப்பதற்கு வாய்ப்புள்ளதாக பவுச்சர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோகித் சர்மாவின் வருங்காலம் பற்றி நாங்கள் அதிகமாக பேசவில்லை. ரோஹித் சர்மாவுக்கு அடுத்தது என்ன? என்று அவரிடம் நேற்று கேட்டேன். அதற்கு டி20 உலகக் கோப்பை என்று அவர் பதிலளித்தார். அது தான் சரி. ரோஹித் சர்மாவின் வருங்காலத்தைப் பற்றி அந்த தகவல் தான் எனக்கு வேண்டியுள்ளது. தன்னுடைய சொந்த தலையெழுத்தின் மாஸ்டராக அவரை நான் பார்க்கிறேன். இருப்பினும் அடுத்த வருடம் மெகா ஏலம் நடக்க உள்ளது”

இதையும் படிங்க: கவுதம் கம்பீரை இந்திய அணியின் கோச்சாக பொறுப்பேற்கும்படி அழைப்பு விடுத்துள்ள பி.சி.சி.ஐ – நடந்தது என்ன?

“எனவே அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை யாரால் கணிக்க முடியும்? நாங்கள் ஒவ்வொரு நாளும் வரும் விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். இந்த சீசனில் நன்றாக துவங்கிய அவர் சிஎஸ்கே அணிக்கு எதிராக சதமடித்தார். ஆனால் நடுவே பெரிய ரன்கள் அடிக்கத் தவறினார். இருப்பினும் இறுதியில் நல்ல ஃபினிஷிங் செய்தார். அந்த வகையில் இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு 2 வெவ்வேறு இலையைப் போல் அமைந்தது” என்று கூறினார்.

Advertisement