எதுவுமே டிஸ்கவுன்ட்ல கிடைக்காது.. 42 வயதிலும் இளம் வீரர்களுக்கு நிகராக விளையாடுவது பற்றி.. தோனி ஓப்பன்டாக்

MS Dhoni CSK 7
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெற்று விட்டாரா என்ற கேள்வியும் கலக்கமும் சிஎஸ்கே ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் 42 வயதாகும் அவர் ஏற்கனவே இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார். அத்துடன் முழங்கால் வலியால் பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடியதால் அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று நம்பப்பட்டது.

ஆனால் பெங்களூருவுக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற சென்னை லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் பிளே ஆஃப் சுற்றில் விளையாடி சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று தோனியை வெற்றிகரமாக வழியனுப்பும் வாய்ப்பையும் சிஎஸ்கே இழந்தது. இருப்பினும் இந்த வருடம் 14 போட்டிகளில் 161 ரன்களை 220.54 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய தோனி வயதானாலும் ஃபினிஷிங் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார்.

- Advertisement -

42 வயதிலும் அசத்தல்:
குறிப்பாக வருடம் முழுவதும் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் மட்டுமே களமிறங்கும் அவர் இப்போதும் பல இளம் வீரர்களுக்கு நிகராக எதிரணிக்கு பயத்தை காட்டும் வகையில் விளையாடினார் என்றே சொல்லலாம். இந்நிலையில் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் ஐபிஎல் தொடரில் எதுவுமே தள்ளுபடியில் கிடைக்காது என்று தோனி தெரிவித்துள்ளார்.

எனவே இளம் வீரர்களுக்கு நிகராக 42 வயதிலும் நன்றாக செயல்படுவதற்கு சமூக வலைதளங்களில் விலகியிருந்து ஃபிட்னஸில் கவனம் செலுத்துவதே காரணம் என்று தோனி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வருடம் முழுவதும் நான் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருப்பது மிகவும் கடினமான விஷயமாகும். எனவே நான் ஃபிட்டாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஃபிட்டாக விளையாடும் இளம் வீரர்களுக்கு எதிராக விளையாடுகிறீர்கள்”

- Advertisement -

“தொழில்முறை விளையாட்டு மிகவும் எளிதல்ல. அங்கே உங்களுடைய வயதை மதித்து யாரும் எதையும் தள்ளுபடியாக கொடுக்க மாட்டார்கள். எனவே நீங்கள் அங்கே விளையாட வேண்டுமெனில் மற்றவர்களைப் போல் ஃபிட்டாக இருக்க வேண்டும். உண்மையாக வயது உங்களுக்கு அந்த கருணையை காட்டாது. எனவே உணவு முறையில் கட்டுப்பாட்டுடன் இருந்து பயிற்சிகளை செய்ய வேண்டும். அதே போல சமூக வலைதளங்களில் இல்லாமல் இருப்பது கவனச் சிதறலை குறைக்கிறது”

இதையும் படிங்க: எங்க தல தோனிக்கா மரியாதை தெரியாது.. இந்தாங்க 2018, 2023 ஆதாரம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி

“சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதும் நான் நான் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்பினேன். அதே சமயம் மனதளவில் ஆக்டிவாக இருக்க விவசாயம் செய்வதையும், இருசக்கர வாகனத்தை இயக்குவதையும் விரும்புகிறேன். பழைய ரக கார்களை பயன்படுத்துவது எனது அழுத்தத்தை குறைக்கிறது. ஒருவேளை அழுத்தமாக உணர்ந்தால் வாகனம் பழுது நீக்கும் இடத்திற்கு சென்று சில மணி நேரம் செலவிட்டால் சரியாகி விடுவேன்” என்று கூறினார்.

Advertisement