ஜடேஜாவுடன் அவரை 2024 டி20 உ.கோ 2வது ஸ்பின்னரா செலக்ட் பண்ணுங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து

Sanjay Manjrekar 2
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் ஐபிஎல் 2024 தொடரில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஃபார்மில் உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது.

அதை வைத்து பார்க்கும் போது சிஎஸ்கே அணியில் சிக்ஸர்களை பறக்க விட்டு அட்டகாசமாக விளையாடும் சிவம் துபே இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோரிடம் கடுமையான போட்டி நிலவுகிறது.

- Advertisement -

சாம்பியன் பவுலர்:
அந்த வரிசையில் சுழல் பந்து வீச்சு துறையில் விளையாடுவதற்காக ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சஹால் ஆகியோரிடையே போட்டி காணப்படுகிறது. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா போல குல்தீப் யாதவ் தற்சமயத்தில் உச்சகட்ட ஃபார்மில் சாம்பியன் பவுலர் போல செயல்பட்டு வருவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். எனவே ஜடேஜாவுடன் அவர் 2வது ஸ்பின்னராக உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று மஞ்ரேக்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றில் குல்தீப் யாதவ் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக அவர் பும்ரா அல்லது சஹால் தங்களுடைய உச்சத்தில் இருந்ததைப் போன்ற நிலையில் இருக்கிறார். அத்தகைய மரியாதையை அவர் கட்டளையிடுகிறார். மிகவும் பொறுப்புடன் சிறப்பாக செயல்பட வேண்டிய தருணங்களில் அவர் சாம்பியன் போல கச்சிதமாக செயல்படுகிறார்”

- Advertisement -

“எடுத்துக்காட்டாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் அவருடைய கடைசி ஓவரில் டெல்லிக்கு கண்டிப்பாக ஒரு விக்கெட் தேவைப்பட்டது. அப்போது அவர் ராகுல் திவாடியாவின் விக்கெட்டை எடுத்துக் கொடுத்ததால் தான் வெற்றியை குஜராத்திடம் இருந்து டெல்லி பறித்தது. அந்த வகையில் தான் குல்தீப் தற்போது சாம்பியன் பவுலராக வந்துள்ளார். அதனால் அவரைப் போன்றவரை நான் அணியில் எழுதுவேன்”

“ரவீந்திர ஜடேஜா இடது கை ஸ்பின்னராகவும் பேட்ஸ்மேனாகவும் அணிக்குள் வருவார். குல்தீப் 2வது ஸ்பின்னராக அணிக்குள் வரவேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் இதுவரை டெல்லி அணிக்காக குல்தீப் யாதவ் 12 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மறுபுறம் அவருக்கு போட்டியாக கருதப்படும் சஹால் ராஜஸ்தான் அணிக்காக 13 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எனவே அவர்களில் இறுதியாக உலகக் கோப்பையில் விளையாடப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement