24 ரன்ஸ்.. போராடிய சூர்யகுமார்.. 12 வருடம் கழித்து கொல்கத்தா சாதனை வெற்றி.. பாண்டியா படையின் கதை முடிந்ததா?

MI vs KKR 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரின் 51வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு பில் சால்டை 5 ரன்களில் அவுட்டாக்கிய துசாரா அடுத்ததாக வந்த ரகுவன்சியை 13 ரன்களில் அவுட்டாக்கினார்.

அத்துடன் நிற்காத அவர் அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை 6 ரன்களில் அவுட்டாக்கி மிரட்டினார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் தடுமாறிய சுனில் நரேன் 8 ரன்களில் அவுட்டாக அதற்கடுத்ததாக வந்த ரிங்கு சிங் 9 ரன்களில் நடையை கட்டினார். அதனால் 57/5 என தடுமாறிய கொல்கத்தாவுக்கு மனிஷ் பாண்டே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஜோடி சேர்ந்து சரிவை சரி செய்ய போராடினார்கள்.

- Advertisement -

வீழ்ந்த மும்பை:
அந்த வகையில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தாவை மீட்டெடுத்த போது மனிஷ் பாண்டே 42 (31) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த ஆண்ட்ரே ரசல் 7 (2) ரன்னில் அவுட்டான நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் அரை சதமடித்து 70 (52) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 19.5 ஓவரில் கொல்கத்தாவை 169 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய மும்பை சார்பில் அதிகபட்சமாக நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 170 ரன்களை துரத்திய மும்பைக்கு இஷான் கிசான் 13 ரன்னில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த நமன் திர் 11 ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் போல்டானார். போதாகுறைக்கு இம்பேக்ட் வீரராக விளையாடிய ரோஹித் சர்மாவும் 11 (12) ரன்களில் நரேன் சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அப்போது வந்த திலக் வர்மா 4, நேஹல் வதேரா 6, கேப்டன் ஹர்டிக் பாண்டியா 1 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 71/6 என சரிந்த மும்பை தோல்வியின் பிடியில் சிக்கிய போது அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 30 பந்தில் அரை சதமடித்து போராடினார். ஆனால் அவரை தக்க சமயத்தில் 56 (35) ரன்களில் ரசல் அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினார்.

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் கடைசியில் டிம் டேவிட் 24 (20) ரன்கள் எடுத்தும் 18.5 ஓவரில் 145 ரன்களுக்கு மும்பையை சுருட்டிய கொல்கத்தா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்தியது அணிக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4, சுனில் நரேன் 2, வருண் சக்கரவர்த்தி 2, ரசல் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: இது ஆரம்பம் தான் கஷ்டப்படாதீங்க.. ரிங்கு சிங் குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக கூறிய – சவுரவ் கங்குலி

இதன் வாயிலாக 2012க்குப்பின் 9 தொடர் தோல்விகளுக்குப் பின் 12 வருடங்கள் கழித்து மும்பையை அதனுடைய சொந்த ஊரான வான்கடே மைதானத்தில் தோற்கடித்து கொல்கத்தா சாதனை வெற்றி பெற்றது. மறுபுறம் சொந்த மண்ணில் தோற்ற மும்பை 11 போட்டிகளில் 8வது தோல்வியை பதிவு செய்து 99% பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு லீக் சுற்றுடன் வெளியேறுவதற்கு தயாராகியுள்ளது.

Advertisement