சாம்பியன் டீம் மாதிரி எகிறி வறோம்.. ஆரம்பத்தில் விட்ட அதையும் புடிச்சுட்டோம்.. ரிஷப் பண்ட் பேட்டி

Rishabh Pant 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற 32வது லீக் போட்டியில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சுமாராக விளையாடி வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தங்களுடைய குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ரஷித் கான் 31 ரன்கள் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதன் பின் 90 ரன்களை சேசிங் செய்த டெல்லிக்கு ஜேக் பிரேசர் 20, அபிஷேக் போரேல் 15, சாய் ஹோப் 19, கேப்டன் ரிஷப் பண்ட் 16* ரன்கள் எடுத்து 8.5 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

மீண்டும் வந்த டெல்லி:
அதனால் தங்களுடைய 3வது பதிவு செய்த டெல்லி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு முன்னேறி ஆரம்பகட்ட தோல்விகளால் இழந்த ரன்ரேட்டையும் பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய குஜராத்துக்கு அதிகபட்சமாக சந்திப் வாரியர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்த வெற்றிக்கு விக்கெட் கீப்பிங்கில் 2 கேட்ச், 2 ஸ்டம்ப்பிங் செய்து 16* ரன்கள் குவித்து கேப்டனாக அசத்திய ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஆரம்பகட்ட தோல்விகளால் இழந்த ரன்ரேட்டை இப்போட்டியில் மீண்டும் பெற்றது மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் தங்களின் அணி சாம்பியன் போல வெற்றி நடை போட துவங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மகிழ்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. நாங்கள் சாம்பியன் அணியை போல் செயல்படும் முறையைப் பற்றி பேசினோம். அதன் படி எங்களால் விளையாட முடியும் என்பதை இன்று எங்களுடைய அணி காண்பித்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பந்து வீச்சில் இது நிச்சயமாக எங்களுடைய சிறந்த செயல்பாடுகளில் ஒன்றாகும். இன்னும் நாங்கள் முன்னேறுவோம் என்பதால் தொடரின் துவக்கத்திலேயே எதையும் அதிகம் சொல்ல முடியாது”

இதையும் படிங்க: ஆர்.சி.பி அணியின் பெயிலியருக்கு முக்கிய காரணம் இதுதான். சேவாக் பகிர்ந்த கருத்து – விவரம் இதோ

“களத்திற்கு வருவதற்கு முன் இருந்த ஒரே சிந்தனை செயல்முறை சிறந்த வழியில் வருகிறது. காயத்திலிருந்து குணமடைந்த நேரங்களில் அது தான் என்னுடைய எண்ணமாக இருந்தது. சேசிங்கில் முடிந்த வரை சீக்கிரம் வெல்வோம் என்பது பற்றி பேசினோம். அதனால் ஆரம்பத்தில் இழந்த ரன்ரேட்டை தற்போது பெற்றுள்ளோம். அகமதாபாத்தில் விளையாடுவதை விரும்புகிறோம். இங்கு அதிக போட்டிகளில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த வெற்றியில் இருந்து அனுபவித்து அதிலிருந்து கற்றுக் கொண்டு முன்னேற விரும்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement