ஆர்.சி.பி அணியின் பெயிலியருக்கு முக்கிய காரணம் இதுதான். சேவாக் பகிர்ந்த கருத்து – விவரம் இதோ

Sehwag
- Advertisement -

டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று ஆறு தோல்விகளுடன் வெறும் 2 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டும் பெங்களூரு அணியானது பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது.

அதன்காரணமாக கடந்த 16 ஆண்டுகளாகவே ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றாமல் இருந்து வரும் ஆர்.சி.பி அணியானது இந்த முறையாவது நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு முறை ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இந்த ஐபிஎல் தொடரிலும் பெங்களூரில் மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

குறிப்பாக நடைபெற்று முடிந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது எக்கச்சக்கமான ரன்களை வாரி வழங்கிய பெங்களூரு அணியானது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பந்துவீச்சில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பெங்களூரு அணியின் இந்த சொதப்பல்களுக்கு என்ன காரணம் என்று குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கூறுகையில் : ஆர்.சி.பி அணியில் உள்ள 12 முதல் 15 வீரர்கள் என அனைவருமே இந்திய வீரர்கள் அவர்களை தவிர்த்து மற்ற அனைவருமே வெளிநாட்டு வீரர்கள்.

- Advertisement -

அதோடு அணியின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருமே வெளிநாட்டு நபர்களாக இருப்பதே பிரச்சினையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். பாதி பேருக்கு ஆங்கிலம் புரிய வாய்ப்பில்லை. தோல்வி அடைந்த பின்னர் கேப்டனோ பயிற்சியாளர்களோ எவ்வாறு சென்று அவர்களை ஆறுதல் செய்வார்கள் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதையும் படிங்க : 8.5 ஓவரிலேயே குஜராத்தை முடித்த டெல்லி அணி.. பாயிண்ட்ஸ் டேபிளில் மும்பையை தள்ளிவிட்டு கம்பேக் வெற்றி

என்னை பொறுத்தவரை கேப்டன் கோச் என அனைவருமே வெளிநாட்டு நபர்களாக இருந்தால் ஆர்.சி.பி அணிக்கு சரியான ஆறுதலை வழங்க முடியாது. எனவே ஆர் சி பி அணியில் உள்ள ஊழியர்கள் நிர்வாகிகள் என அனைவரையும் மாற்றி அமைத்தால் பெங்களூரு அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement