8.5 ஓவரிலேயே குஜராத்தை முடித்த டெல்லி அணி.. பாயிண்ட்ஸ் டேபிளில் மும்பையை தள்ளிவிட்டு கம்பேக் வெற்றி

GT vs DC 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத் மைதானத்தில் 32வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு துவக்க வீரர்கள் ரிதிமான் சஹா 2, கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதே போல தமிழக வீரர் சாய் சுதர்சன் 12 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றுத்துடன் சென்றார். அதே ஓவரில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய டேவிட் மில்லரும் 2 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 30/4 என தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற குஜராத்தை மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்த அபினவ் மனோகர் 8, ராகுல் திவாட்டியா 10 ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

- Advertisement -

அசத்தல் வெற்றி:
அப்போது வந்த தமிழக வீரர் சாருக்கான் டக் அவுட்டாகி கைவிட்டார். கடைசியில் ரசித் கான் முடிந்தளவுக்கு போராடி அதிகபட்சமாக 31 (24) ரன்கள் எடுத்தார். இறுதியில் 17.3 ஓவரிலேயே 89 ரன்களுக்கு ஆல் அவுட்டான குஜராத் அணி ஐபிஎல் தொடரில் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.

டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, இஷாந்த் சர்மா 2, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 90 என்ற சுலபமான இலக்கை துரத்திய டெல்லிக்கு அதிரடியாக விளையாடிய ஜேக் பிரேசர்-மெக்குர்க் 20 (10) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் ப்ரித்வி ஷா 7 ரன்களில் அவுட்டாகி சென்றார். அதற்கடுத்ததாக வந்த அபிஷேக் போரேல் அதிரடியாக விளையாட முயற்சித்த போது 15 (7) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இறுதியில் கேப்டன் ரிஷப் பண்ட் 16* (11) சுமித் குமார் 9* ரன்கள் எடுத்ததால் 8.5 ஓவரிலேயே 92/4 ரன்கள் எடுத்த டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. குறிப்பாக 67 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற டெல்லி ஐபிஎல் தொடரில் பந்துகள் அடிப்படையில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

இதையும் படிங்க: இதெல்லாம் சரில்ல.. ஐபிஎல் நியாயமா நடக்கனும்ன்னா.. பந்து தயாராகும் கம்பெனியை மாத்துங்க.. கம்பீர் யோசனை

மேலும் இதையும் சேர்த்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்த டெல்லி புள்ளிப்பட்டியலில் மும்பையை 9வது இடத்திற்கு தள்ளிவிட்டு அங்கிருந்து 6வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. மறுபுறம் குஜராத் சார்பில் அதிகபட்சமாக சந்திப் வாரியர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதனால் 7 போட்டிகளில் நான்காவது தோல்வியை பதிவு செய்த குஜராத் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திற்கு சென்றது.

Advertisement