லக்னோ நகரில் நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 48-ஆவது லீக் போட்டி பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் சற்றும் குறைவில்லாமல் சுவாரஸ்யமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது ஹார்டிக் பாண்டியா தலைமையிலான பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
அதன் காரணமாக மும்பை அணியின் ரன்குவிப்பில் தொய்வு ஏற்பட்டது. இறுதியில் எப்படியோ 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி லக்னோ அணியானது :
19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த தொடரில் தங்களது ஏழாவது தோல்வியை பதிவு செய்ததோடு சேர்த்து பெங்களூர் அணிக்கு அடுத்ததாக ஒன்பதாவது இடத்தையும் பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஐபிஎல் விதிமுறையை இரண்டாவது முறையாக மீறியதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பாண்டியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசு முடிக்கவில்லை என்று ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா தண்டிக்கப்பட்டு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க : இந்தியாவின் பவுலிங் டெம்ப்ளேட் தப்பா இருக்கு.. அவரை செலக்ட் பண்ணிருக்கனும்.. ஆரோன் ஃபின்ச் பேட்டி
தற்போது இரண்டாவது முறையாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் பந்துவீச கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டதால் ஐபிஎல் விதிப்படி கேப்டனுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதமும், அணியில் விளையாடிய ஒவ்வொரு வீரருக்குமே 6 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது முறை இதே போன்ற தவறு நடைபெறும் பட்சத்தில் கேப்டன் ஒரு போட்டியில் விளையாட தடை செய்யப்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.