இதெல்லாம் சரில்ல.. ஐபிஎல் நியாயமா நடக்கனும்ன்னா.. பந்து தயாராகும் கம்பெனியை மாத்துங்க.. கம்பீர் யோசனை

Gautam Gambhir
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடர் கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. பொதுவாகவே ஐபிஎல் தொடரில் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைப்பது வழக்கமாகும். ஆனால் இந்த வருடம் அது புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் 277 ரன்கள் குவித்தனர். அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற பெங்களூருவின் 11 வருட சாதனையை உடைத்த ஹைதராபாத் புதிய சாதனை படைத்தது. ஆனால் அடுத்த சில வாரத்திலேயே பெங்களூருவை மீண்டும் துவம்சம் செய்த ஹைதராபாத் 287 ரன்கள் குவித்தது.

- Advertisement -

கம்பீர் ஆலோசனை:
அதனால் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்து ஹைதராபாத் புதிய சாதனை படைத்தது. இது போக கொல்கத்தாவுக்கு எதிராக 224 ரன்களை எடுத்து வென்ற ராஜஸ்தான் ஐபிஎல் வரலாற்றில் பெரிய இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சாதனை படைத்தது. இப்படியே போனால் இந்த வருடமே 300 ரன்கள் அடிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை எனலாம்.

அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் பேட்டுக்கும் பந்துக்கும் சமமான போட்டி இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் இப்படி அதிரடியாக விளையாடுவதற்கு தற்போதைய குக்கும்புரா நிறுவனத்தின் தரமற்ற பந்துகள் தான் காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் மற்றும் கொல்கத்தா அணி ஆலோசகர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். எனவே ஐபிஎல் சமமான நியாயத்துடன் நடைபெற வேண்டுமெனில் பந்து தயாரிக்கும் கம்பெனியை மாற்ற வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “50 ஓவர்கள் தாங்கக்கூடிய பந்துகளை தயாரிப்பாளர் தயாரிக்காமல் போனால் அந்த தயாரிப்பாளரை மாற்ற வேண்டும். பந்து தயாரிக்கும் கம்பெனியை மாற்றுவதில் எந்த தவறும் இல்லை. கும்கும்புரா பந்துகளை தான் பயன்படுத்த வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா” என கூறினார்.

இதையும் படிங்க: 89க்கு ஆல் அவுட்.. முன்னாள் சாம்பியனை தெறிக்க விட்ட டெல்லி.. முதல் முறையாக குஜராத் 2 மோசமான சாதனை

அதே போல இந்தியாவின் நட்சத்திர தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே ஐபிஎல் தொடரில் சமநிலையை ஏற்படுத்துவதற்கு குக்கும்புராவுக்கு பதிலாக டுக் நிறுவனத்தின் பந்துகளை பயன்படுத்தலாம் என்று ட்விட்டரில் ஆலோசனை தெரிவித்துள்ளார். அதை பயன்படுத்தும் போது பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் இடையே நல்ல சமநிலை ஏற்படும் என்றும் ஹர்ஷா போக்லே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement