அந்த பயம் இருக்கட்டும் தம்பி.. கண்முன்னே வந்த பிசிசிஐ ஆப்பு.. அடக்கி வாசித்த கொல்கத்தா வீரர்

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரின் 47வது லீக் போட்டியில் டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி 154 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35* ரன்கள் நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக பில் சால்ட் 68, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33* ரன்கள் அடித்து 16.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 6வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

கண்முன்னே வந்த பயம்:
மறுபுறம் அக்சர் படேல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி 11 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்து பின்னடைவை சந்தித்தது. முன்னதாக இந்த வருடம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக கொல்கத்தா தங்களுடைய முதல் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் மயங் அகர்வால் விக்கெட்டை கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணா எடுத்தார்.

அப்போது தம்முடைய கையால் முத்தமிட்டு அதை மயங் அகர்வால் முகத்துக்கு முன் காற்றில் பறக்க விட்ட
ஹர்ஷித் ராணா விக்கெட்டை வெறித்தனமாக கொண்டாடியது ரசிகர்களை கடுப்பாகியது. ஏனெனில் மயங் யாதவ் இந்தியாவுக்காக விளையாடிய சீனியர் வீரராக அறியப்படுகிறார். மறுபுறம் ஐபிஎல் தொடரில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ள ஹர்ஷித் ராணாவை பெரும்பாலான ரசிகர்களுக்கு யார் என்று கூட தெரியாது.

- Advertisement -

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணிக்காக விளையாடிய சீனியர் வீரர் என்ற மரியாதை இல்லாமல் மயங் அகர்வால் முகத்துக்கு நேராக அவர் அப்படி கொண்டாடியதை ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக “இதெல்லாம் தேவையற்றது இதே போல பேட்ஸ்மேன்கள் பவுண்டரி போதெல்லாம் முத்தத்தை காட்டில் பறக்க விட்டால் நீங்கள் தாங்குவீர்களா?” என்று கவாஸ்கர் அவரை கண்டித்திருந்தார்.

இதையும் படிங்க: நான் ஒன்னும் தப்பான முடிவு எடுக்கல.. கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் பேசிய – ரிஷப் பண்ட்

அத்துடன் அப்படி கொண்டாடியதற்காக 60% போட்டி சம்பளத்தை ஹர்ஷித் ராணாவுக்கு பிசிசிஐ அபராதமாக விதித்திருந்தது. அந்த நிலையில் இப்போட்டியில் டெல்லி வீரர் அபிஷேக் போரேலை போல்ட்டாக்கிய ஹர்ஷித் ராணா மீண்டும் அப்படி முத்தமிட்டு வெறித்தனமாக கொண்டாடுவதற்காக வாய் மேல் கையை வைத்தார். ஆனால் அப்போது பிசிசிஐ கொடுத்த தண்டனை கண்முன்னே வந்ததை தொடர்ந்து கையை அப்படியே தம்முடைய பின்னே எடுத்துச் சென்ற ஹர்ஷித் ராணா அந்த விக்கெட்டை சாதாரணமாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement