நான் ஒன்னும் தப்பான முடிவு எடுக்கல.. கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் பேசிய – ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

கொல்கத்தா நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது கொல்கத்தா அணியிடம் அதன் சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்து நடப்பு தொடரில் தங்களது ஆறாவது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி 21 பந்துகளை மிச்சம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்களையும், ரிஷப் பண்ட் 27 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு டெல்லி அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததாலே இந்த சரிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் 33 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது நல்ல முடிவு தான்.

- Advertisement -

ஆனால் இந்த போட்டியில் எங்களது பேட்டிங் யூனிட்டால் பெரிய அளவு ரன்களை குவிக்க முடியவில்லை. 150 ரன்கள் என்பதெல்லாம் தற்போது வெற்றிக்கு போதுமான ஸ்கோர் கிடையாது. இருந்தாலும் இது போன்ற ஆட்டங்களில் இருந்து எங்களது தவறுகளை நாங்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லா நாளும் நமக்கு வெற்றிகரமாக நாளாக அமைந்திடாது.

இதையும் படிங்க : எனக்கு அவர் தான் ஹெல்ப் பண்ணுவாரு.. போன மேட்ச்ல ஷாருக்கான் பேசுனாரு.. ஆட்டநாயகன் வருண் பேட்டி

கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ளதில் மகிழ்ச்சி ஆனாலும் இந்த தோல்வி டி20 கிரிக்கெட்டில் ஏற்படக்கூடிய ஒன்றுதான். இந்த போட்டியில் 180 முதல் 210 ரன்கள் வரை குவித்து இருந்தால் நிச்சயம் அது போதுமான ஸ்கோராக இருந்திருக்கும். எங்களது பவுலர்களுக்கு நாங்கள் இலக்கினை வைத்து சுருட்ட போதுமான அளவு ரன்களை கொடுக்கவில்லை என்பதாலே இந்த தோல்வி ஏற்பட்டதாக ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement