எனக்கு அவர் தான் ஹெல்ப் பண்ணுவாரு.. போன மேட்ச்ல ஷாருக்கான் பேசுனாரு.. ஆட்டநாயகன் வருண் பேட்டி

Varun Chakravarthy
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 47வது லீக் போட்டியில் டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி சுமாராக விளையாடி 20 ஓவரில் 153/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு பிரிதிவி ஷா 13, ஜேக் 12, ரிஷப் பண்ட் 27 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை.

அதனால் 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35* ரன்கள் எடுத்து ஓரளவு மானத்தை காப்பாற்றினார். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 174 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக பில் சால்ட் 68, ஸ்ரேயாஸ் ஐயர் 33* ரன்கள் அடித்து 16.3 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் சக்ரவர்த்தி:
அதனால் டெல்லி சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 13 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் தமக்கு எதுவுமே கை கொடுக்காமல் போனால் சுனில் நரேன் உதவி செய்வதற்கு தயாராக இருப்பார் என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

அத்துடன் கடந்த போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக மோசமாக செயல்பட்ட போது கொல்கத்தா அணியின் உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் உத்வேகத்தை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “போட்டி நடைபெற நடைபெற பிட்ச் கொஞ்சம் நின்று வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். 2வது இன்னிங்ஸில் அது கொஞ்சம் நன்றாக சுழன்றது”

- Advertisement -

“ரிஷப் பண்ட்க்கு எதிராக முதல் பந்திலேயே கேட்ச் தவறியது. அதை மிகவும் நல்ல பந்து என்று நினைத்த நான் விரைவில் அவரை அவுட்டாக்கினேன். அது மற்ற மைதானத்தில் சிக்ஸராக போயிருந்திருக்கலாம். இப்போதெல்லாம் வெற்றி சிறிய வித்தியாசத்தில் தீர்மானிக்கப்படுகிறது. ஸ்டப்ஸ் விக்கெட்டை எடுத்தது எனக்கு பிடித்தது”

இதையும் படிங்க: மானத்தை காப்பாற்றிய டெயில் எண்டர்.. 15 ரன்னில் சொதப்பிய டெல்லியை நொறுக்கிய சால்ட்.. கேகேஆர் 6வது வெற்றி

“பொதுவாக எனக்கு ஏதாவது சரியாக செல்லவில்லை என்றால் அங்கே சுனில் நரேன் உதவி செய்வதற்காக இருப்பார். அதிக ரன்களை வாரி வழங்கிய கடந்த போட்டியை மறக்க வேண்டும். இருப்பினும் அந்த போட்டி முடிந்ததும் அபிஷேக் நாயர் மற்றும் ஷாருக்கான் போன்ற பலரும் என்னிடம் பேசி உத்வேகத்தை கொடுத்தனர். இனிமேல் சியர் லீடர் பெண்கள் பவுண்டரிக்கு பதிலாக சிக்ஸர்கள் அடித்தால் மட்டுமே நடனமாட வேண்டும்” என்று கலகலப்பாக பேசி முடித்தார்.

Advertisement