கௌஹாத்தி நகரில் நேற்று நடைபெற்று முடிந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65-ஆவது லீக் போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஐந்தாவது தோல்வியை பதிவு செய்தது. இருப்பினும் ராஜஸ்தான் அணி ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த அணியின் சார்பாக நான்காவது வீரராக களமிறங்கி விளையாடிய ரியான் பராக் 34 பந்துகளை சந்தித்து ஆறு பவுண்டரிகளுடன் 48 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதோடு அவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தனித்துவமான சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை ரியான் பராக் 12 இன்னிங்ஸ்களில் விளையாடி 531 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
அதாவது சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில் ஒருவர் இந்த ஆண்டு 500 ரன்களை கடந்தது இதுதான் முதல் முறை. 2023 ஆம் ஆண்டு வரை மோசமான இன்னிங்ஸ்களை விளையாடி வந்த ரின் பராக் ராஜஸ்தான் அணிக்கு தேவை இல்லை என்று பலரும் பேசி வந்த வேளையில் அவர் மீது நம்பிக்கை வைத்த ராஜஸ்தான அணியின் நிர்வாகம் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி இருந்தது.
இதையும் படிங்க : ராஜஸ்தான் தோல்வி.. அதிர்ஷ்டமான குவாலிபயர் 1 போட்டிக்கு சிஎஸ்கே தகுதி பெற செய்ய வேண்டியது இதோ
இவ்வேளையில் இந்த ஆண்டு அவரது அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.