ராஜஸ்தான் தோல்வி.. அதிர்ஷ்டமான குவாலிபயர் 1 போட்டிக்கு சிஎஸ்கே தகுதி பெற செய்ய வேண்டியது இதோ

Qualifier Scenario
- Advertisement -

விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி உச்சகட்டத்தை தொட்டுள்ளது. அதில் கொல்கத்தா ஏற்கனவே முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது. அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் 2வது அணியாக தகுதி பெற்ற நிலையில் எஞ்சியுள்ள 2 இடங்களை பிடிப்பதற்கு நடப்பு சாம்பியன் சென்னை, ஹைதெராபாத், பெங்களூரு ஆகிய அணிகளிடையே போட்டி காணப்படுகிறது.

தற்போதைய நிலைமையில் ஹைதராபாத் அடுத்த 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட 3வது இடத்தை பிடிப்பதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. அதனால் 4வது இடத்தை பிடிப்பதற்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளிடம் உச்சகட்ட போட்டி காணப்படுகிறது. குறிப்பாக மே 18ஆம் தேதி பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்றே சொல்லலாம்.

- Advertisement -

அதிஷ்டம் கிடைக்குமா:
அந்த சூழ்நிலையில் மே 15ஆம் தேதி நடைபெற்ற 65வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியிடம் ராஜஸ்தான் 5விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் ராஜஸ்தான் 4 தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கும் பொன்னான வாய்ப்பை ராஜஸ்தான் கிட்டதட்ட கோட்டை விட்டுள்ளது என்றே சொல்லலாம்.

பொதுவாக புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெறும். அப்போட்டியில் தோல்வியை சந்தித்தால் கூட மீண்டும் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடி ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பை எக்ஸ்ட்ராவாக பெற முடியும் என்பதே குவாலிபயர் 1 போட்டியின் சிறப்பம்சமாகும். அந்தப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு தற்போது சென்னை அணிக்கு கிடைக்க உள்ளது.

- Advertisement -

அது நடக்க வேண்டுமெனில் முதலாவதாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வெற்றி பெற்று 16 புள்ளிகளை பெற வேண்டும். அத்துடன் ராஜஸ்தான் அணி அதனுடைய கடைசிப் போட்டியில் தோற்க வேண்டும். அது போக ஹைதெராபாத் அணி அதனுடைய கடைசி 2 போட்டியில் குறைந்தபட்சம் 1 போட்டியில் தோற்க வேண்டும். 2 போட்டிகளிலும் தோற்றால் இன்னும் சிறப்பு.

இதையும் படிங்க: ஒன்னு முழுசா விளையாட வாங்க.. இல்லனா இந்தியாவுக்கு வராதீங்க.. இர்பான் பதான் விளாசல்

எனவே மேற்கண்ட அம்சங்கள் நடந்தால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி குவாலிபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு கிடைக்கும். அதே சமயம் தன்னுடைய கடைசி 2 போட்டியிலும் வென்றால் அந்த வாய்ப்பு ஹைதராபாத்துக்கு சென்று விடும். அதே போல ராஜஸ்தான் அணியும் தனது கடைசி போட்டியில் வெல்லும் பட்சத்தில் 2வது பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே மிகவும் கடினமான அந்த வாய்ப்பை அதிர்ஷ்டத்தால் சென்னை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement