ஃசெல்பிஷா இருக்க விரும்பல.. 8 வருஷத்துக்கு முன்னாடி முடிவு பண்ணேன்.. அடுத்து கரீபியன்ல சம்பவம்.. பூரான் பேட்டி

Nicholas Pooran
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே 17ஆம் தேதி நடைபெற்ற 67வது லீக் போட்டியில் மும்பையை 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ நிக்கோலஸ் பூரான் 75, கேப்டன் ராகுல் 55 ரன்கள் எடுத்த உதவியுடன் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய மும்பை 20 ஓவரில் 196/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு ரோகித் சர்மா 68, நமன் திர் 62* ரன்கள் எடுத்தும் கேப்டன் பாண்டியா சூரியகுமார், யாதவ் உள்ளிட்ட இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் 10வது தோல்வியை பதிவு செய்த மும்பை புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்து பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது. மறுபுறம் லக்னோ ஆறுதல் வெற்றி பெற்றது.

- Advertisement -

பூரான் நெகிழ்ச்சி:
இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 69/3 என லக்னோ தடுமாறிய போது 75 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய நிக்கோலஸ் பூரான் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் கடந்த 8 வருடத்திற்கு முன் கார் விபத்தால் காயமடைந்த தமக்கு ஆதரவும் வாய்ப்பும் கொடுக்கும் ஒவ்வொரு அணிக்கும் சுயநலமின்றி அனைத்து இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருப்பதாக நிக்கோலஸ் பூரான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதே ஃபார்மில் அடுத்த நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அசத்துவதற்கு காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை தனிப்பட்ட முறையில் ஃபினிஷிங் செய்யும் வேலையை நான் செய்ய வேண்டும் என்று கருதுகிறேன். இந்த சீசனுக்கு வரும் போது என்னுடைய ஆட்டம் என்னவாக இருக்கும் என்பது எனக்கு தெரியும்”

- Advertisement -

“பல வருடங்களாக பயிற்சி செய்து வரும் நான் அனைத்து அனுபவத்தையும் ஒன்றாக சேர்த்து விளையாடுகிறேன். 3, 4, 5, 6, 7 ஆகிய இடங்களில் நான் விளையாடியுள்ளேன். எனவே குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து விளையாடுவதற்காக நான் சுயநலவாதியாக இருக்கக் கூடாது. எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய முடியும் என்பதே என்னுடைய ஆட்டத்தின் அழகாகும். கிரிக்கெட்டை மீண்டும் 2வது முறையாக விளையாடுவதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்”

இதையும் படிங்க: 18 ரன்ஸ்.. லக்னோவிடம் தோற்ற மும்பை.. 17 வருட ஐபிஎல் வரலாற்றில் வேறு யாருமே செய்யாத அவமான சாதனை

“8 வருடத்திற்கு முன்பு விபத்தை சந்தித்த போது இனிமேல் ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று முடிவெடுத்தேன். எனக்கு ஆதரவு கொடுக்கும் அணிகளுக்கு திருப்பிக் கொடுப்பது என்னுடைய கடமையாகும். கண்டிப்பாக சொந்த மண்ணில் நடைபெறும் உள்ள உலகக்கோப்பையில் விளையாட ஆவலுடன் உள்ளேன். கடந்த சில வருடங்களாக கரீபியன் அணிக்கு கடினமான காலங்கள் இருக்கிறது. எனவே எங்கள் மண்ணில் உள்ள மக்களுக்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்ய காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement