டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ரிங்கு சிங் செய்த செயல் – கடைசியில் பெயிலியரான சோகம்

Rinku
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து ஐ.சி.சி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி பல்வேறு முக்கிய மாற்றங்களை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு ரோகித் சர்மா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியையே அனுப்பும் என்றும் அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சுகள் எல்லாம் இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கரும் இந்திய அணியின் நிர்வாகமும் ரோகித் சர்மா தலைமையில் அனுபவம் மிகுந்த ஒரு அணியையே தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் பல்வேறு இளம் வீரர்கள் தங்களது மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த ஐ.பி.எல் தொடரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேவேளையில் கடந்த பல மாதங்களாகவே இந்திய டி20 அணியில் பினிஷராக செயல்பட்டு வரும் ரிங்கு சிங் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் சற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

அதன்காரணமாக இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி விளையாடிய போது மூன்றாவது வீரராக களம் இறங்கினார். இந்த போட்டியில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் டி20 உலக கோப்பை தொடரில் இடம் கிடைக்கும் என்று நம்பி களமிறங்கிய ரிங்கு சிங் 11 பந்துகளில் ஒரு பவுண்டரியை மட்டும் அடித்து 11 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : வதந்திகள் உண்மை தான்.. இதான் மும்பையின் தோல்விக்கு காரணம்.. கோப்பை வெல்வது கஷ்டம்.. மைக்கேல் கிளார்க்

டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே களமிறங்கி தனக்குத்தானே சோதனை செய்து கொண்ட ரிங்கு சிங் அதில் பெயிலியரும் அடைந்துள்ளார். ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை பினிஷர் ரோலில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்துள்ள ரிங்கு சிங்கிற்கு கட்டாயம் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் வழங்கப்படும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement