வதந்திகள் உண்மை தான்.. இதான் மும்பையின் தோல்விக்கு காரணம்.. கோப்பை வெல்வது கஷ்டம்.. மைக்கேல் கிளார்க்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றியும் 6 தோல்வியும் பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தவிக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. குறிப்பாக இம்முறை ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.

மறுபுறம் பதவி கைக்கு வந்ததும் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை சீனியர் என்று பார்க்காமல் பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு ஹர்திக் பாண்டியா வற்புறுத்தினார். அதனால் கோபமடைந்த மும்பை ரசிகர்களே தற்போது வரை பாண்டியாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த சூழ்நிலையில் பும்ரா, ஆகாஷ் மாத்வால் போன்ற வீரர்கள் இப்போதும் ரோகித் சர்மாவே தங்களுடைய கேப்டனாக பாவிக்கின்றனர்.

- Advertisement -

கிளார்க் விமர்சனம்:
அதனால் முக்கிய நேரத்தில் பாண்டியாவிடம் ஆலோசனை கேட்காத அவர்கள் ரோகித் சர்மாவிடம் ஆலோசனை கேட்ட வீடியோ துளிகள் வைரலானது. அதே போல பயிற்சியாளரான லசித் மலிங்காவுக்கு பாண்டியா மரியாதை கொடுக்காமல் நடந்து கொண்ட ஒரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வகையில் மும்பை அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வதந்திகளாக வெளிவந்தன.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளாக் தெரிவித்துள்ளார். அங்கே அனைத்து வீரர்களும் அணியாக விளையாடாமல் தன்னிச்சையாக செயல்படுவதால் இம்முறை கோப்பையை வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அவர்கள் பிளே ஆஃப் செல்ர்களா என்பது எனக்குத் தெரியவில்லை”

- Advertisement -

“வெளியில் இருந்து நாம் பார்ப்பதை விட அவர்களுடைய அணிக்குள் நிறைய விஷயங்கள் நடக்கிறது என்று நினைக்கிறேன். அங்கே பல நல்ல வீரர்கள் இல்லை. அவர்கள் தொடர்ச்சியாக அசத்துவதுமில்லை. எனவே அவர்களுடைய அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதனால் ஏதோ ஒரு விஷயம் அவர்கள் அணியில் நடக்கவில்லை. அவர்கள் ஒன்றாக பேசி அணிக்காக சேர்ந்து விளையாடவில்லை”

இதையும் படிங்க: ஆஸிஸ் இந்த தப்பை பண்ண மாட்டோம்.. கடைசியா கோலி பற்றி யோசிச்சுக்கோங்க.. அகர்கருக்கு ஹைடன் மெசேஜ்

“பெரிய தொடரை வெல்வதற்கு நீங்கள் ஒரு அணியாக சேர்ந்து அசத்த வேண்டும். தனிநபர்களால் கோப்பையை வெல்ல முடியாது. அந்த வகையில் துரதிஷ்டவசமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அவர்கள் அணியாக விளையாடவில்லை. அவர்கள் இதை மாற்றுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அவர்கள் கோப்பையை வெல்வதை பார்க்கப் போவதில்லை. இருப்பினும் ரோஹித் சர்மா சதமடித்து அல்லது பாண்டியா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அல்லது பும்ரா ஜீனியஸாக பந்து வீசினால் நடக்கும் என்ன என்பது உங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்.

Advertisement