ஆஸிஸ் இந்த தப்பை பண்ண மாட்டோம்.. கடைசியா கோலி பற்றி யோசிச்சுக்கோங்க.. அகர்கருக்கு ஹைடன் மெசேஜ்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் அந்த அணியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட வேண்டடுமென ஒரு தரப்பும் கழற்றி விடப்பட வேண்டும் என்று மற்றொரு தரப்பும் கடந்த சில மாதங்களாகவே பேசி வருகிறார்கள்.

ஏனெனில் வெஸ்ட் இண்டீஸில் உள்ள பெரும்பாலான பிட்ச்கள் ஸ்லோவாக இருக்கும். மறுபுறம் விராட் கோலி கொஞ்சம் மெதுவான ஸ்ட்ரைக் ரேட்டில் நங்கூரமாக விளையாடி கடைசியில் வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஸ்டைலை கொண்டவர். அதனால் அவரை தேர்வு செய்யக்கூடாது என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஹைடன் கருத்து:
ஆனால் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தது போல இம்முறையும் இந்தியா வெல்வதற்கு விராட் கோலி அவசியம் என்று இர்பான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியர்கள் எப்போதும் டேவிட் வார்னர், விராட் கோலி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீரர்களை பார்க்காமல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களையே தேர்வு செய்து வருவதாக மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

எனவே விராட் கோலி போன்ற சீனியர்களை தேர்ந்தெடுக்கலாமா அல்லது துபே போன்ற இளம் வீரர்களை தேர்வு செய்யலாமா என்பதை கடைசியாக யோசித்து முடிவு எடுக்குமாறு அவர் அஜித் அகர்கருக்கு மெசேஜ் கொடுத்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் பார்வையில் எங்களுடைய தத்துவம் மிகவும் எளிது. நாங்கள் எப்போதும் நட்சத்திர வீரர்களின் பெயர்களை எடுக்க மாட்டோம்”

- Advertisement -

“உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வீரர்களை தேர்ந்தெடுப்போம். அந்த வகையில் டேவிட் வார்னரை தேர்ந்தெடுக்கலாமா? என்ற விவாதம் எங்கள் அணியிலும் இருக்கிறது. ஆனால் கடந்த 20 – 30 வருடங்களாகவே யார் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்ற சவாலில் சிந்தித்து செயல்படுவதில் நன்றாக செயல்படுகிறோம் என்று நினைக்கிறேன். விராட் கோலியை பற்றி இங்கே முதன்மையான விவாதம் இருக்கிறது”

“அவரால் உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியுமா? அவருடைய கடைசி உலகக்கோப்பை அற்புதமாக இருந்தது. அவருடைய புள்ளிவிவரங்கள் தவறாக இல்லை. எனவே அனுபவமிக்க வீரர்களை தேர்ந்தெடுப்பதா? அல்லது உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாட இளம் வீரர்கள் தேவையா? என்பது முக்கியமாகும். அமெரிக்காவில் தெரியாத சூழ்நிலையில் இந்தியா 4 போட்டிகளில் விளையாட உள்ளது”

இதையும் படிங்க: அந்த பயம் இருக்கட்டும் தம்பி.. கண்முன்னே வந்த பிசிசிஐ ஆப்பு.. அடக்கி வாசித்த கொல்கத்தா வீரர்

“வெஸ்ட் இண்டீஸில் பெரும்பாலான மைதானங்கள் மிடில் ஓவர்களில் சுழலுக்கு சாதகமாக இருக்கும். அங்கே தான் முதல் 6 ஓவர்களுக்குப் பின் விராட் கோலிக்கான சவால் காத்திருக்கிறது. அங்கே பந்து குறைந்த வேகத்தில் வரும் போது துபே அல்லது ரிங்கு போன்றவர்கள் உங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வார்கள். கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணியில் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் தான் இருந்தனர்” என்று கூறினார்.

Advertisement